நான் எனப்படும் நான் : 191
” There is no one called GURU but we Assume So ! “



குரு என்று யாராவது இந்த உலகில் உண்டா ?
இல்லை.
இருந்தார்களா ?
இல்லை.
இனி இருப்பார்களா ?
இல்லவே இல்லை.
அப்படியா ? அப்படி எனில் ஏன் குரு பௌர்ணமா கொண்டாடப்படுகிறது ? ஏன் நாம் குரு என்னும் யாரையோ கூப்பிட்டு நன்றி சொல்கிறோம் ?
கவனிப்போம்.



ஒரு காலத்தில் புத்தர் என்னும் ஒருவர் இருந்திருக்கிறார். அல்லது இல்லை. இருந்ததால் அவர் சொல்லியவை என்று இன்று நிறைய படிக்கிறோம் அல்லது வேறு யாரோவெல்லாம் சொல்லியதை புத்தர் சொல்லியதாக நம்புகிறோம். அவற்றை படிக்கிறோம். புரிந்துகொள்கிறோம். பின்பற்றுகிறோம். வாழ்வின் நல்ல பக்கங்களை நோக்கி நகர்கிறோம். அதற்கான நன்றியை யாருக்கு தெரிவிப்பது என்று யோசிக்கிறோம். அங்கே தான் குரு என்னும் புத்தர் வருகிறார். இருந்தாரா, இல்லையா, சொன்னாரா, சொல்லவில்லையா, வேறு யாரும் சொன்னார்களா .. ஒருவரா பலரா .. ? எதுவும் தெரியாது. ஆனாலும் அனுமானத்தில் புத்தர் என்று உருவகப்படுத்தி குரு பௌர்ணமி வாழ்த்துகளை சொல்கிறோம்.
நன்கு யோசித்தால் அது புத்தருக்கு அல்லது குருவுக்கு ஆன வாழ்த்து அல்ல. நமக்கானது ! நமக்கா ? என்று கேள்வி வருகிறதா ? ஆம். நமக்குத் தான். பலர் அல்லது சிலர் அல்லது ஒருவர் சொன்ன, எழுதிய, வாழ்ந்த தத்துவத்தை எடுத்துக்கொண்டு … அதற்கு தன்னை மாற்றிக்கொள்ள தயாராகி, மாற்றியவுடன் அதன் நிறை குறைகளை அளந்து .. புதிய மனிதனாக மாறும் தன்மை இருக்கிறதே … அது நமக்குள் இருக்கும் குரு வின் அடையாளம். ஆம். தன்னை மாற்றிக்கொள்ள தயாராகிறவன் தயாராகிறவள் தான் முதல் குரு இந்த உலகில் ! அந்த எண்ணம் தான் குரு. அந்தக் குருவுக்கு தான் குரு பௌர்ணிமா வாழ்த்துகளை நாம் சொல்லிக்கொள்கிறோம்.
” The Guru reside within you is The Real Guru of All Gurus in the Universe “



புத்தர் ஒருமுறை தண்ணீர் கொண்டு வந்த தன் சீடரை பார்த்து கேட்டார் ..
” நன்றி சொல்லியாயிற்றா ? “
” வானுக்கு, மழைக்கு, நிலத்திற்கு, கிணற்றிற்க்கு, வாளிக்கு, நீருக்கு .. .. நன்றி சொல்லிவிட்டேன் குருவே . “
” அதெல்லாம் சரி .. ஒரு நன்றியை நீ சொல்லவே இல்லையே “
சீடர் கொஞ்சம் அதிர்ந்து பின் யோசித்து …
” எனக்கு இந்த வாய்ப்பினை கொடுத்த உங்களுக்கும் நன்றி குருவே “
” இல்லை .. இன்னொன்று பாக்கி இருக்கிறது “
சீடர் நன்கு யோசித்து …
” தெரியவில்லை குருவே “
இப்போது புத்தர் சிரித்துக்கொண்டு சொன்னார்
” எனக்கு தவித்தவுடன் நீர் கொண்டுவர நீ சென்ற நேரத்தில், ஒரு வேளை செல்லாமல் இருந்திருந்தால் .. உன் இருப்பில் சுகமாக அமர்ந்து இருந்திருப்பாய். அந்த சுகத்தை இழந்து தான் எனக்கு உதவுகிறாய். அதற்கு உன் உடல் உதவுகிறது. அதற்கு உன் எண்ணம் உதவுகிறது. அந்த எண்ணத்திற்கு முதலில் உன் நன்றியை சொல். இந்த உலகின் முதல் குரு உன் எண்ணம் தான் “
” Thoughts are Timelessl Gurus. Humans are Time Being Gurus. “



புகைப்படம் ;
இமயமலையில் எடுத்த புகைப்படம். #HIDE2022 ல் அடுத்து பயணிக்க இருக்கும் குழு இந்த புத்தரை சந்திக்கவிருக்கிறது. அதற்கு தயாராகும் அவர்களின் எண்ணத்திற்கு எம் முன்
வாழ்த்துக்கள்
.