நான் எனப்படும் நான் : 192
” Skill is a Representation of A Treasure Thread that stays within, Waiting for Your Arrival “



எத்தனை முறை படித்தாலும், பார்த்தாலும், யோசித்தாலும் வியப்பை தருவதில் #BruceLee நிகராக ஓர் ஆளுமை உண்டா என தெரியவில்லை. அவரின் ஒற்றை வரிகளில் வாழ்க்கை தன்னை வைத்துக்கொண்டு படிப்பவருக்காக காத்துக்கொண்டு இருக்கிறது.
” A Warrior is an Average man with Laser like Focus “
Focus என்கிற ஒன்றை கையில் எடுத்து விட்டால் எந்த ஒரு சராசரி மனிதனும், பெரும் போராளி, அறிவாளி, உழைப்பாளி, முதலாளி தான். சராசரி மனிதன் என்பதே Focus அற்ற மனிதனை தான் குறிக்கும். ஒரு மனிதன் Focus செய்ய ஆரம்பிக்கிறான் என்றால் .. நமக்குள் அவன் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் வர வேண்டும்.



” I am not in this world to live up to your expectations and You are not here to live up to mine “
யாரும் யாருக்காகவும் வாழ வேண்டிய அவசியம் இல்லை. கணவன் மனைவி உறவு கூட புரிதலுக்கான ஒன்று மட்டுமே தவிர ” உனக்காக நான் எனக்காக நீ ” என்பதெல்லாம் இல்லை. அவரவர் ஓடம். அவரவர் ஆறு. அவரவர் ஏற்ற இறக்கம். ஆங்காங்கே உதவி கொடுப்பதும், பெறுவதும், கேட்பதும், பெற்றுக்கொள்வதும் … அந்தந்த ஆளுமைகள் தனக்குள் எழுதும் சட்டங்களை பொறுத்தது. இங்கே மனித மானுடம் தவிர விதிகள் என்று ஏதும் இல்லை.



” A Wise Man can Learn from a Foolish Question than a Fool can learn from Wise Answer “
அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படும், தன்னை தானே சுய பகடி செய்துகொள்பவர்களின் கேள்விகள் … அவர்களுக்கு புதிய அறிவை கொடுக்கவல்லவை. அதே சமயம் ஒரு முட்டாளால் நல்ல பதிலில் கூட கற்க முடியா வாழ்க்கையை வாழ்பவனாகவே இருக்க முடிகிறது. யார் நாம் ? கேள்விகளில் பதில்களில் கற்கவல்லவரா ? அல்லது கேள்விகள் பதில்களில் தான் பெரியவன் என்று காண்பிக்க விரும்புபவரா ?



Part 02 வில் சந்திப்போம்.