படம் சொல்லும் பாடம் – 061
” Standby the Promise – at any cost ! “



#bookishblessings ல் 52 புத்தகங்களை இலக்காக எடுத்து இருப்பது அனைவர்க்கும் தெரியும். கற்றலுக்கான இன்னொரு Medium Cinema ! ஆம். Cinema நிறைய நல்ல விடயங்களை கற்றுக்கொடுக்கிறது. இன்னமும் சரியாக சொல்ல வேண்டும் எனில் … நல்ல Cinema நல்ல விடயங்களை கற்றுக்கொடுக்கிறது – Visual Medium அல்லவா ?
பத்திரிக்கையாளர்களை பற்றி நமக்கு என்ன தெரியும் ? நிருபர்களை பற்றி ? அங்கே வேலை செய்பவர்களை பற்றி ? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ? இந்தப் படம் அதை அழகாக சொல்லும்.
ஒரு முக்கிய தகவல் கிடைக்கிறது. Journalist அதை பிரசுரிக்கிறார். அரசாங்கத்திற்கு எதிராக அது அமைகிறது. அரசாங்கம் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது. Journalist சொன்னது உண்மை. அதனால் அதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் Journalist க்கான Source தெரிந்தால் போதும். இந்த மாதிரி தகவல்களை இனி வராமல் செய்து விடலாம். இவ்வளவு தான் படம். Journalist சொன்னாரா ? குறிப்பாக அந்த Source யார் அரசாங்கத்திற்கு தெரிய வருமா ? நமக்கு Source தெரிய வரும்போது …Journalist மேல் அல்ல … Journalism மேலேயே மதிப்பு கூடுகிறது !. இந்திய Journalists ல் பெரும்பாலோர் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். பார்த்தால் ? மனசாட்சி அவர்களை கேள்வி கேட்கும் !
” நல்ல மனிதன். நல்ல வாழ்க்கை. அவரின் இறப்பு. அவருக்காக பெரும் கூட்டம் வர வேண்டும். ஆனால் வரவில்லை. ஏன் தெரியுமா.? அன்று பெரும் மழை பெய்கிறது. ஆம். நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அன்றைய Climate தான் நமக்கான Presence ஐ முடிவு செய்கிறது “
என்கிற இந்த ஒரு வரி புரிதலுக்காகவே படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.
நடிப்பும் வாழ்வியலும் வேறு வேறு அல்ல என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு – Court / Judge / வாதம் / பிரதி வாதம் / குடும்பம் / கணவன் / Jail / மகன் / தன் அலுவலக நட்பு … அனைத்தையும் ஒரு பெண் Journalist எதிர்கொள்கிறாள் – தீர்க்கமான எண்ணம், பார்வை மற்றும் முடிவுடன் !
” என்னை நம்பி சொன்ன Source ஐ எப்படிக் காட்டிக் கொடுக்க முடியும் ? ” என்கிற ஒற்றைக் கேள்விக்கு மொத்த படத்திலும் நம்மால் பதிலே சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. பெரும் உண்மை.
பார்த்துவிட்டு இங்கே Comment ல் உங்களின் பார்வையை பகிரலாம். அது இன்னமும் பல பரிமாணங்களை கொண்டு வரும்.



ஞாபகம் இருக்கட்டும்.
52 புத்தகங்கள் /
100 நல்ல படங்கள் /
40 இலட்சம் Steps /
4 Blood Report
2 இமயமலை பயணங்கள் ….
என்று 2023 தொடங்குகிறது.
உங்களின் வாழ்வும் தொடங்கட்டும். தொடங்கி இருக்கும் என்று நம்புகிறேன்.