படம் சொல்லும் பாடம் – 059
#AloneInBerlin Amazon Prime #படம்சொல்லும்பாடம் #MovieWatching
” A Governance which stands for Citizens Know what is Nationalism is Truly about ”
” ஹிட்லர் ன் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தாயா ? ”
என்று கேட்கும் சக நாட்டவனிடம் …
” என் மகனை போரில் இழந்திருக்கிறேன் வேறென்ன இதை விட இந்த நாட்டுக்கு கொடுக்க முடியும் ? ”
என்று கேட்பதில் ஆரம்பிக்கிறது படம்.
எதையோ சொல்லிக்கொண்டு நாட்டு மக்களுக்கு எதிரியாகவே ஒரு அரசாங்கம் செயல்படுவதை – மகனை இழந்த ஒரு பெற்றோர் வெளிக்கொணர முயல்வது தான் கதை ! ஆங்காங்கே முள் குத்துகிறது,ரத்தம் வடிகிறது – காட்சிகளில், வசனங்களில்.!
முள் 01 ;
மாடியில் இருந்து குதித்து இறக்கும் வயதான யூத பாட்டியிடம் இருந்து ஆபரணத்தை எடுக்கும் காட்சி.
முள் 02 ;
அதே வயதான யூத பாட்டி இறக்கும் முன் … ஒரு நாஜி இளைய வயது படை வீரனிடம் …
” உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? நீ இங்கே தான் வளர்ந்தாய். Bell அடிக்கும்போதெல்லாம் நான் உனக்கு Cake வழங்கி இருக்கிறேன். நீ இன்று வளர்ந்து விட்டாய். பலமாக. ”
என்பதில் இருக்கிறது எப்படி ஒரு நாடு நாசமாகிக் கொண்டு இருக்கிறது என்பது !
எழுத்து எவ்வளவு முக்கியம் என்று அந்த பெற்றோர்களுக்கு தெரிந்திருக்கிறது. கையெழுத்துப் பிரதிகளை நாடு முழுக்க பரப்ப எண்ணி, கணவன் தன் கையாலேயே எழுதும் பிரதிகளை கணவனும் மனைவியுமாக … ஆங்காங்கே பரப்புவதில் police க்கு தடுமாற்றம் வருகிறது.
கதை இருக்கட்டும். சில விடயங்கள் தெளிவாக புரிகிறது.
இறந்த யூதர்களின் சொத்துக்களை எடுத்துக்கொண்டவர்கள் ஜெர்மானியர்கள். இன்று வாழும் ஜெர்மனியர்களின் சொத்தில் ஒரு பகுதி யூத இனத்திற்கு சொந்தமானது.
யூதர்களை காட்டிக்கொடுத்து தங்களை வளர்த்துக்கொண்ட அதே ஜெர்மானியர்களில் …நல்லவர்களும் இருந்திருக்கிறார்கள். நிறைய யூதர்களுக்கு உதவி இருக்கிறார்கள்.
அனைத்து ஜெர்மனிய மக்களும் Hitler க்கு ஆதரவு சொன்னவர்கள் அல்ல. அங்கே மனித நேயம் கொண்ட ஜெர்மனியர்கள் தங்கள் அரசாங்கத்தை எதிர்த்திருக்கிறார்கள்.
யூதர்களை கொல்வது வெறும் தத்துவமாக மட்டுமே ஜெர்மனியர்களுக்கு பிடித்துபோகவில்லை. அவர்களை கொல்லும்போது மீதம் உள்ள சொத்து ” நமக்குத் தான் ” என்பதாலும் !. ஆம். சொத்துக்களை ஜெர்மனியர்கள் எடுத்துக்கொள்வதில் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. சுருக்கமாக சொன்னால் ஒரு இனத்தின் ஆள் அழிவை அரசாங்கம் செய்ய, சொத்துக்களை மக்கள் சுரண்ட …நடந்த அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட வன்முறை அது !. உலகின் மிக மோசமான அரசாங்க ஆட்சி மொழிக்கு ஹிட்லர் தான் முதல் உதாரணம்.
சொந்த மக்களை பிரித்து, ஒரு பகுதியை கொன்று, அதனால் இன்னொரு பகுதியின் ஆதரவை பெற்று … கொடுமை !
மனித நேயப்படி யூதர்களுக்கு இடம் கொடுத்து உதவி செய்தவர்களுக்கு அங்கே என்ன பெயர் தெரியுமா ?
தேசத் துரோகி.!. ஆம். சொந்த மக்களை கொல்ல காட்டிக்கொடுப்பவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா ? தேசப் பக்தன் !
அப்பாவாக நடிப்பவர் Winston Churchil ஆக நடித்த அதே நடிகர் தான். உடல் மொழியில் அசத்துவதோடு, சோக இழையோடும் முகத்தில் … தெரியும் தீவிரத்தன்மையை .. மறைத்து ஆனால் காட்டும் நடிப்பு. மனைவியும் இணையாக நடிப்பில்.
கிட்டத்தட்ட நாம் அங்கே வாழ்ந்த உணர்வு.
படம் பார்க்க நேரம் செலவிடுவது தவறு இல்லை – இப்படியான படங்களை பார்த்து சில பாடங்களை நாம் கற்றுக்கொண்டால் !.
1920 முதல் 1943 வரை கையெழுத்து பிரதிகளால், Hitler ஐ எதிர்த்த ஒரு பெற்றோரின் உண்மைக் கதை !