படம் சொல்லும் பாடம் – 063
#TheBachelors Amazon Prime : 3 / 100 / 2023
” Life has a Series of Twists and Turns. One Never Knows what Happens Next ”
கணவன் மனைவி மகன் என்கிற அழகான குடும்பம். Cancer ல் மனைவி இறந்து போக – அப்பாவும் மகனும் Bachelors ஆகி விடுகிறார்கள். அதற்கு பின்பான வாழ்க்கை என்ன என்பதே கதை !
இந்த Bachelors வாழ்வில் இரு பெண்கள் வருகிறார்கள். அங்கே இருந்து வாழ்க்கை தன் பக்க Twist களை அள்ளித் தெளித்துக் கொண்டே இருக்கிறது. அப்பாவாக நடிக்கும் அந்த நடிகரின் முகத்தில் தான் எவ்வளவு அழகான இறுக்கம் ! Belt ஐ கொஞ்சம் தள்ளி அணிந்திருப்பதற்கு பின்னே இருக்கும் மனைவியின் நினைவு. வாழ்வில் நல்ல நினைவுகளை தொடர ஒரு தைரியம் வேண்டும். மகன் அப்பாவிடம் ” எப்படி இருந்தது Date ? ” என்று கேட்க சிரிக்கும் அப்பாவின் முகம் – Just Wow !! அப்பாவும் மகனும் ஓடும் அந்த Running காட்சி – நமக்குள் அப்பாவுடன் எப்போது இப்படி ஓடினோம் என்று கேட்க தோன்றுகிறது. நானும் அப்பாவும் Walking போகும் நாட்களை நினைவுக்கு கொண்டும் வருகிறது.
மகனின் முகத்தில் அப்படி ஒரு யதார்த்தம் ! கதைக் களம் நம்மை என்னவோ செய்கிறது. பக்கத்து வீட்டில் வாழும் இருவர் போலவே இருவரும் நம்மை வசீகரிக்கிறார்கள். காட்சிகள் அழகழகாய் தவழ்கின்றன. மகனின் முத்தத்திற்கு … பெண் சொல்லும் …
” இதை விட உயர்வாக நாம் இருக்க விரும்புகிறேன் ”
என்கிற வரியில் இருக்கும் தரம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். காதல் மேலானது தான். ஆனால்
… அதற்கும் மேலாக பெரும் உணர்வுகள் இருக்கின்றன.
மனித உணர்வுகளை ரசித்து படம் செய்ய – முதலில் Director க்கு அந்த ரசனை இருக்க வேண்டும். அதை விட முக்கியமான ஒன்று படத்தில் கூடவே வருகிறது. அது .. ? மெல்லிய இதமான இசை ! உள்ளே என்னவோ செய்கிறது. ஆனால் மகிழ்வாக செய்கிறது. Suspense இல்லை. Thrill இல்லை. ஆனால் தேனில் குழைந்த நூற்கண்டு ஒன்று .. தன்னை தானே மெதுவாக அவிழ்த்துக் கொள்வது போல காட்சிகள். அப்படி அவிழும் போது நமக்குள்ளும் ஏதோ ஒன்று அவிழ்ந்து கொண்டே இருக்கிறது. படம் என்றால் அப்படி இருக்க வேண்டும். மகனுக்கு இருக்கும் தந்தைக்கான பொறுப்புணர்வு, தந்தைக்கு இருக்கும் மகனுக்கான பொறுப்புணர்வு .. அதைக் காட்சிப்படுத்தும் விதம் … இந்தப் படம் நமக்குள் வாழ்க்கையை பற்றி ஒரு புரிதலை கொண்டு வரவில்லை எனில் … நமக்குள் வேறு என்னவோ Settings இல் அடைத்துக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம் !
அப்பா மகன் உறவிற்கென்று ஒரு படம். உணர்வுகளோடு. மகள் மகன் அல்லது அப்பா அம்மா யார் பார்த்தாலும் என்னவோ ஒன்று நமக்குள் நெகிழும். நெகிழ வேண்டும்.
Car ன் அந்த Reverse Seat தான் வாழ்க்கை. யாருக்கோ என்னவோ அது சொல்லிக்கொண்டே இருக்கிறது.
வாழ்த்துகள்.
#moviewatching #படமும்பாடமும் #100Moviesfor2023 #Zenlp #ZenlpAcademy Zenlp Academy
Inviting Shankara Narayanan Sam Kumar Thinker Sathish Kumar Priya Kumar Kavitha Suresh Priya Rajiv Kirthika Tharan Sudha S Narayanan Sudha Chellappa Asha Bhagya Raj Bhagya Raj Yamini and others .. To watch First watch yourself and then … with Sons and Daughters.
Shall we ?