படம் சொல்லும் பாடம் – 062
#படமும்பாடமும் #100moviesfor2023 #moviewatching #zenlp #zenlpacademy Zenlp Academy ; 2/100 / 2023 Amazon Prime
” Behind every unexpected happenings, There comes a Set of Unexpected Talents ”
Twin Tower இடிக்கப்பட்டது தெரியும். அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்று நமக்கு தெரியும். ஆனால் நாம் யூகிக்க முடியா விளைவை அது ஏற்படுத்தியதை படமாக எடுத்து இருப்பதை முதலில் பாராட்ட வேண்டும். இந்தியா மாதிரியான நாடுகளில் ஒரு எதிர்பாரா Terrorist Attack நடந்தால் இறந்தவர்களுக்கு ” இவ்வளவு ” என்று அறிவித்து விட்டு கடந்து விடலாம். ஆனால் அமெரிக்காவில் … ?
அதிலும் High Profile ல் வேலை செய்யும் Twin Tower ல் தங்கள் உயிரை இழந்தவர்களுக்கு யார் நிவாரணம் கொடுப்பது ? Airways நிர்வாகமா ? கிட்டத்தட்ட 5800 plus மனிதர்களுக்கு கொடுத்தால் எந்த நிர்வாகமும் தாக்குப்பிடிக்குமா ? அப்படியே அரசாங்கம் கொடுக்க நினைத்தாலும் …இதை யார் முன்னெடுத்து செய்வது ? மேலே சொன்னது தான் படம். அதை முன்னெடுக்கும் ஒருவரை அடுத்த நாள் காலையிலேயே Mr President தொலைபேசியில் அழைத்து உரையாடி வாழ்த்துகிறார் என்றால் இது எவ்வளவு பெரிய வேலையாக இருக்கக் கூடும் ?
முதலில் Number தானே என்று அலட்சியமாக இதை கையில் எடுக்கும் நிறுவனத்தின் Team .. மக்களின் உணர்வுகளை கேட்க கேட்க .. இது வெறும் Number அல்ல / வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளும்போது படம் பாதியை கடந்து விடும். பார்க்க ஆரம்பித்தால் வேறு எந்த கவனமும் வர முடியா அளவிற்கு Frame By Frame காட்சிகள்.
Michael Keaton ன் நடிப்புக்கு நான் ரசிகன். மிக எளிதான மனிதராக ஆனால் பெரும் உயரங்களை சொல்லும் அந்த முகத்தில் தான் எவ்வளவு யதார்த்தம். Formula என்று பேச ஆரம்பித்து / வாழ்க்கை என்று புரிந்து / என்னை நம்ப ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்களேன் .. என்று கேட்டு … மனிதர் அசத்துகிறார். அந்த Team ம் அசத்துகிறது. இந்திய வம்சாவளிப் பெண்ணும்.
போகிற போக்கில் யாரோ எவரோ எங்கோ ஒரு ” நாச வேலையை ” திட்டமாக செய்து, மனிதர்களை அழித்து … வெற்றியை கொண்டாடிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் அது எத்தனை மனிதக் கனவுகளை இல்லாமல் செய்து விடுகிறது ? ! வன்முறை போல ஒரு ” செயற்கையான அரக்கன் ” இல்லை !! இல்லவே இல்லை. இந்த ” செயற்கை அரக்கனின் ” செயலுக்கு எந்தச் செயற்கைக் கடவுள்களும் பொறுப்பேற்பதும் இல்லை !!
படம் பார்த்து முடித்த பின்பு வரும் இது உண்மைச் சம்பவமும் அதன் பின் அந்த நிறுவனம் இன்று வரை செய்திருக்கும் உதவுவதின் சாதனைகளையும் யோசித்தால் .. நாமெல்லாம் இன்னமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது – என்று தோன்றும்.
அப்படியான படங்களை பார்க்கும் ” துணிவை ” நம் ” வாரிசுகளுக்கும் ” உருவாக்க வேண்டும் !!