படம் சொல்லும் பாடம் – 064
#படமும்பாடமும் ; 4 / 100 / 365 ;
” Survival is not a challenge. Its an art to be learnt – Every time with the support of Brilliance and Perseverance “



” தங்கையை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவள் உயிரோடு இருப்பதற்கு நீ தான் பொறுப்பு ” என்று அம்மா பெரிய பெண்ணிடம் சொல்வது தான் கதையே !
அக்கா தங்கை உறவு – அதில் வரும் ஆழ் நீர் திடீர் சூழல் சவால் – அதை எதிர்கொள்ள வேண்டிய அக்கா / அதை சார்ந்து நடக்கும் Survival போராட்டம் – படம் ஆரம்பம் முதல் இறுதி வரை – சிலிர்க்கிறது. நாமே உயிருக்கு போராடுவது போல உணர்வு. அவர்கள் தடுமாறினால் நாம் உள்ளே விழுந்து காப்பாற்ற வேண்டும் போன்ற அந்த உணர்வு தான் படத்தின் வெற்றி !
அக்கா தங்கையாக நடிப்பவர்கள் இருவரும் நடிக்கிறார்கள் என்று சொல்லவே முடியாத வாழ்வியல் நடிப்பு. நமக்கு கிட்டத்தட்ட minus degree யில் வாழும் அனுபவம். போராட்டம் என்று வந்துவிட்டால் துரும்பும் ஆயுதம். அது கொண்டு வரும் நம்பிக்கை, அதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் … simply wow !
Sun Burns but Cold Kills என்பது தான் உண்மை. எவ்வளவு வேண்டுமானாலும் சூரியனை சகிக்க முடியும். ஆனால் குளிர் ? அதிலும் நீருக்குள் ? அதிலும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் செயல் அற்று நிற்கும்போது ? அதிலும் உடல் சோர்ந்து மயங்கும் போது ? வாழ்க்கையில் நாம் சந்தித்த Survival போராட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஞாபகத்தில் வரும் / வர வைக்கும் படம் இது.
தன்னுடன் வரும் நாயைப் பார்த்து ..
” Are You Too Giving up ? ” என்று கேட்பதில் இருக்கிறது நமது சுவாசத்திற்கான போராட்டமும் அல்லது சுவாசம் அற்று அடங்குதலும் !



படம் முடியும்போது ஒன்று தோன்றியது.
” எந்த ஒரு சூழலிலும், Survival ன் Maximum என்னவென்று பார்த்து விட்டால் .. அங்கே கிடைக்கும் அனுபவங்களில் .. வாழ்வின் Spiritual Experience என்றால் என்ன ? என்பது தெரிந்து விடும் – உண்மையாக ! “


