படம் சொல்லும் பாடம் – 065
#படமும்பாடமும் : 005 / 100 / 2023
” Step in their shoes. A New world will blossom within “



திருமணமான அனைவர்க்கும் குழந்தைகள் பிறந்து விடுகிறதா ? அப்படியே பிறந்தாலும் உடல்நல பாதிப்புகள் இன்றி குழந்தைகள் பிறந்து விடுகிறதா ? சரி . ஒருவேளை அப்படிப் பிறந்து விட்டால் … என்ன மாதிரியான பெற்றோராக நாம் இருக்கிறோம் ? அவ்வளவு தான் கதை.
ஆனால் .. ஆனால் … காட்சிக்கு காட்சி நமக்கு என்னவோ பாடத்தை படம் நடத்திக்கொண்டே இருக்கிறது. அறிவுரையாக அல்ல. நிகழும் காட்சிகளாக. அந்த உலகை புரிய அந்த உலகிற்குள் செல்ல வேண்டும். வெளியே இருந்து புரிய முயற்சிப்பதும், நம் உலகிற்கு அவர்களை இழுத்து வர முயற்சிப்பதும் போல ஒரு முட்டாள்தனம் இல்லை.



மூன்று Teens ன் நடிப்பும் நடிப்பா இது ? என்று சொல்லும் அளவிற்கான வாழ்வியல். சில இடங்களில் நமக்கு கண்ணில் நீர் வரும். சில இடங்களில் நம் கன்னத்தில் அறை விழும். சில இடங்களில் நாம் நம்மை பற்றி பெருமைப் படுவோம். சில இடங்களில் …நமக்கு ” ச்சே .. இது கூட புரியாமல் வாழ்ந்திருக்கிறோமே ” என்று தோன்றும். அதுதான் படத்தின் வெற்றி ! அவர்களின் ஒரு சிறு பயணம் தான் அவர்களின் வேத புத்தகம். Infinity யை பார்த்த உடன் வரும் மாற்றங்கள் ஒரு பயணிக்கு மட்டுமே புரியும்.
நிலாவில் வளர்பிறை தேய்பிறை என்பதெல்லாம் மாயத் தோற்றமே ! சரியான இடத்தில் இருந்து கவனித்தால் .. அது எப்போதுமே நிலா தான்.
” இருக்கும் இடத்திலும்,
கவனிக்கும் கண்ணிலும்,
புரியாத அறிவியலிலும் ..
கவனிக்க ஆரம்பித்தால் ..
நிலாக்கள் கண்ணில்
தெரியாமலும் போகக்கூடும் ! “



படம் பார்த்துவிட்டு ஒரு சிறு நடை நடப்பது .. பெரும் உதவியாக இருக்கக்கூடும். சில விடயங்கள் அப்போது தான் Digest ம் ஆகும். முன் வாழ்த்துக்கள். ஒரு Parental Counsellor ஆக Asha Bhagya Raj இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். மற்றபடி படம் அனைத்து Parents க்குமான ஒன்று. ( ஒரு காட்சியை தவிர அனைவருமாக பார்க்க வேண்டிய படம் ! )


