படம் சொல்லும் பாடம் – 068
#MovieWatching ; 008 / 100 / 2023 Amazon Prime
” Taken for Granted ? Or Emotionally Dominated ? “



( முதல் காட்சியை பார்த்து பயப்பட வேண்டாம். அங்கே இருந்து ஆரம்பிக்கிறது ஆணாதிக்கம் ! )
இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற கணவன். அந்த விழாவில் ….
அருகில் இருக்கும் மனைவியிடம் ஸ்வீடன் நாட்டின் மன்னர்
” நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? ” என்று கேட்க …
” I am The King Maker “
என்று சொல்லும் பதிலில் இருக்கிறது மொத்த படத்தின் உயிரும் !
பெண் என்பவளின் பங்கு ஆணின் வெற்றியில் இருப்பதை, என்ன தான் ஆண் ஒத்துக்கொண்டாலும் … அதன் மன அழுத்தம், அதன் வலி, அது தனக்கு மேல் ஏற்படுத்தும் சமூக அழுத்தம் … என்ன ஒரு நடிப்பு அந்த மனைவி பாத்திரத்திற்கு ?! கணவனின் நடிப்பும் சளைத்த ஒன்று அல்ல. இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள். படம் முழுக்க … ஏதோ ஒன்று நம்மை நெருடிக்கொண்டே இருக்கும். அதற்கு பதில் நம் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.
ஆங்காங்கே படம் முழுக்க மின்னல் கீற்றுகளாக காட்சித் தத்துவங்கள். ஆணின் தவறுகள். அவற்றை Manage செய்யும் பெண்ணின் வலிமை. மகன், மகள், அடுத்த தலைமுறை .. என்று நமக்கு அருகில் ஒரு குடும்பம் வசிப்பதை போன்ற உணர்வு. கூடவே பயணித்த பேசிய வாழ்ந்த .. காட்சி அமைப்பு. நோபல் பரிசு வெல்பவன் வீட்டிலும் புரியாத அழுத்தப்பட்ட மௌன மறைக்கப்பட்ட கோப .. உணர்வுகள் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த உணர்வு புரிய ஆரம்பிக்கும் போது அவன் இருப்பே இல்லாது போகிறது. அப்படி எனில் .. நோபல் பரிசுக்கும் மேலாக குடும்பங்கள் இருக்கின்றன என்பது தானே உண்மையாக இருக்க வேண்டும் ?! இருக்கும்.
இந்த உலகத்தில் ஏதோ ஒரு Award ஐ வாங்கும் கணவனுக்கு பின் ஒரு மனைவியின் சொல்ல முடியா அழுத்த உணர்வு ஒன்று … நீருக்குள் குமிழாய் மேலும் வராது, உள்ளேயும் உடையாது …சுற்றிக்கொண்டு இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?



” இந்த தியானத்தை சிறப்பாக முடித்திருக்கிறோம். இதற்கு காரணமான எங்களின் மூத்த Monk அவர்களுக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் “
சீடர் சொன்னவுடன் மொத்த கூட்டமும் கை தட்டியது.
அங்கே அமர்ந்திருந்த Monk முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
கவனித்த சீடர் அருகே சென்று …
” உங்களுக்கு தான் இந்த கைதட்டலும் வாழ்த்தும் ” என்று சொல்ல …
Monk தலை நிமிராமல் கேட்டார் …
” அப்படியா ? “





