படம் சொல்லும் பாடம் – 066
#படமும்பாடமும் ; 006 / 100 / 2023 Amazon Prime
” Carrying old memories ? At what Cost ? “



அனைவர்க்கும் கடந்த காலம் என்று ஒன்று உண்டு. அதில் நல்லது கெட்டது புரிந்து செய்த புரியாது செய்த என்று பல பக்கங்கள் உண்டு. நிகழ்காலம் அவற்றை எல்லாம் யோசிக்க விடாமல் நம்மை இழுத்துப் பிடித்து வைத்தாலும் அவ்வப்போது கடந்த காலங்களை நோக்கி பயணிப்பவர்கள் தான் நாம். ஆனால் … அப்படிப் பயணித்த பின் என்னவாக ஆகிறோம் ? இருக்கிறோம் ? என்பதே கேள்வி.
இளம் பருவ நினைவுகள். அதன் நிகழ்கால தொடர்புகள். தற்கால விவாகரத்து பெற்ற கணவன் மனைவி உறவு. விவாகரத்து பெற்றாலும் அப்பா என்று உறவு கொண்டாடும் மகள். அவளுக்கு பிறக்கப்போகும் Josua என்னும் மகன். இதற்குள் தான் கதை. ஆனால் … ஆங்காங்கே நமக்கு நம்மை நினைவுபடுத்தும் கதை.
அந்த அப்பா தான் Hero. எவ்வளவு யதார்த்தமான நடிப்பு. அப்படியே வாழ்கிறார். அவரின் கடந்தகாலம், நிகழ்கால அவரின் வாழ்க்கை, postcard பழக்கம், ஓடாத Watch … என்று அப்பட்டமான நடிப்பு. வாழ்க்கையின் பக்கங்கள் நகர நகர .. நாம் just ஒரு story தான் என்கிற 101 ஆம் நிமிட சில நொடிகள் பேச்சில் மொத்த படத்தையும் நமக்கு உள்ளே புகுத்தி விடுகிறார். Just WoW.
படம் முடியும் போது சில கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைத்திருக்கும். சில பதில்களுக்கு கேள்விகள் முளைத்து இருக்கும். அது தான் சிறப்பான படத்தின் அடையாளம்.
தன் கடந்த காலத்தை Check செய்யப் போகிறவர்களுக்கு .. முன் வாழ்த்துகள்.





