படம் சொல்லும் பாடம் – 070
” Life Has Many addictions. If you are True to your addiction, Whether it’s Good or Bad, You will reach Your Peak status “



Lobbying என்று கேள்விப்பட்டதுண்டா ? இது என்ன ? எதற்கு என்று நீங்கள் யோசித்தது உண்டா ? இதை யார் செய்கிறார்கள் என்று கவனித்தது உண்டா ? இதை செய்ய வேண்டிய இடம் – அரசியல் சார்ந்த / நாட்டை சார்ந்த / பொருளாதாரம் சார்ந்த / தேர்தல் சார்ந்த … பெரும் அதிகாரமும் பணமும் புழங்கும் – இடம் என்பதை உங்களால் உணர முடிகிறதா ? முடியவில்லையா ? இந்தப் படம் உங்களுக்கு ” பின்னே ” நடக்கும் நிகழ்வுகளை உணர்த்தும்.
Thriller ஆகவே ஒரு Political படம் எடுக்க முடியுமா ? முடியும் என்று நிரூபிக்கிறது Director & Team ! பெரும் வாழ்த்துக்கள் மொத்த Team ற்கும். அரசாங்கம் ஒரு Policy யை கொண்டு வர நினைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் Policy யை மக்கள் ஆதரிக்க வேண்டும், அதற்கு பெரும் வரவேற்பு வேண்டும் என்றால் … அங்கே தான் ” மறைமுக Push ” தேவைப்படுகிறது ! அங்கே தான் Lobbyist வருகிறார்கள். அவர்கள் ” எதையும் ” செய்வார்கள். மீண்டும் சொல்கிறேன். ” எதையும் ” !
Lobby செய்வது என்பது இருள் வனத்தில் இரத்தம் குடிக்க காத்திருக்கும் ஆண் குள்ள நரிகளுக்கு இடையே செய்யப்பட வேண்டிய – பெரும் சாகசப் பணி ! கிட்டத்தட்ட வாழ்க்கையை Risk ன் எல்லையில் வைத்து / வாழ்வதற்கு சமம். இப்படியான Field ல் – ஒரு பெண் Lobbyist ஆக இருந்தால் ? நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த இருள் வனத்தில் அவளின் வாழ்க்கை / அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் / அதை அவள் எதிர்கொள்ளும் விதம் – Jessica Sebastian ன் நடிப்புக்கு தீனி கொடுத்துக்கொண்டே இருக்கும் காட்சிகள் ! காட்சிக்கு காட்சி மிளிர்கிறார். நம் கலாசாரத்தை கேள்வி கேட்கும் ( கொஞ்சம் அதிர்வை கொண்டு வரும் ) தனி வாழ்க்கை / ஆட்களை வாங்குவது, விற்பது, விற்பதை போல நடித்து வாங்கி வைப்பது … நீதிபதியிடம் பேசும் தோரணை – வார்ரே வாவ் தான் !
Lobby ing சரி தவறு எல்லாம் கடந்து … ” அட இப்படி ஒரு வாழ்க்கையா ? ” என்று கேட்க வைக்கும் இந்தப் படத்தை பார்க்கும்போது நமக்குள் இந்த நாட்டின் Lobbyist எல்லாம் ஞாபகத்தில் வருவார்கள். ஆம். அந்த ஞாபகத்தில் பெண்களும் உண்டு. US ல் இருக்கும் பாதுகாப்பு அளவிற்கு இங்கே இல்லை என்னும் போதும் பெண்கள் இங்கே Lobbyist ஆக இருக்க – நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும் !
படம் பார்த்துவிட்டு தோன்றியதை தான் மேலே Quote ஆக வந்திருக்கிறது. ஆம். சரியோ தவறோ – தான் விரும்புவதை முழு ஈடுபாட்டுடன் செய்தால் அதில் பெரும் உயரங்கள் நிச்சயம் !


