படம் சொல்லும் பாடம் – 071
#படமும்பாடமும் : 011 / 100 / 2023 :
” Never Assume someone Ordinary. As You do so, Get ready to Face an Extra-ordinary out of Him or Her “



Action படங்கள் நிச்சயம் ஒரு தனி உலகம் சார்ந்தவை தான். இது இன்னும் வேறு ரகம்.
” தான் உண்டு தன் வேலை உண்டு ” என்று வாழும் ஒருவனை – இந்த உலகம் சாதாரணமாகவே நினைத்து பேசிக்கொண்டே இருக்கிறது. அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருக்கும் அவனிடம் மனைவியும் மகனும் அதே மொழி பேச … பொறுமை எல்லையை அடைகிறது. சின்ன மகள் ” தன் பொம்மையை ” காணோம் என்று சொல்லி – அதே சாதாரணத்தை பேச …அங்கே எழுகிறது ஒருவனின் இன்னொரு ” கடந்த கால முகம் ” !
இந்தக் கணத்தில் இருந்து படம் முடியும் வரை – Action at its best ! ” கதவை திறந்து விடணும் கடவுளே ” என்று வேண்டும்போதும் அதற்கு பின்பும் தெரியும் அந்த Action முகம் – இவரிடம் இருந்தா ? என்னும் முகம் ! அடி கொடுத்துக்கொண்டே இருக்கும் Hero அல்ல. அவ்வப்போது அடி வாங்கி மீண்டும் எழுந்து கொடுக்கும்போது .. நமக்கு வியப்பு ஒரு புறம் வந்தாலும், இன்னொரு புறம் ” இப்போது எழுந்து வந்து அடிப்பாரே ” என்கிற அந்த உணர்வு … Just WoW தான் !
சாலையில் செல்லும் போது … யாராவது கொஞ்சம் சாதாரணமாக தெரிந்தால் … அவரிடம் அவளிடம் Supremacy யை காண்பிக்காமல் சிரித்துக் கடப்பது உசிதம். இல்லை எனில் அவர் / அவள் அவரின் அவளின் அப்பா வரை இன்னொரு Extra-Ordinary Group நம்மை உண்டு இல்லை என்று ஆக்க காத்திருக்கக் கூடும் !



Background ல் பாட்டு ஒலித்துக்கொண்டே – நடக்கும் Action Sequence ல் – நமக்குள் ஒரு ரசனை அழகாக வரும். Action படங்களை கூட ரசனையாக எடுக்க முடியும் என்றால் அதில் இது ஒரு Variety Classic !



” Who are you ? “
என்கிற கேள்விக்கு அவர் சொல்லும்
” I am Nobody ” யில் இருக்கிறது – மொத்தப் படமும்.
” If you see that I am Mad, But I am just a Soul whose Intentions are Good .. oh lord .. please don’t let me be misunderstood “
என்று படத்தின் முடிவில் .. முடியும் அந்தப் பாடல் உள்ளே என்னவோ செய்து கொண்டே இருக்கிறது ! அதுதான் Action படத்தின் வெற்றி.
” இந்த வீட்டுல Basement இருக்கா ? கணவன் ஆரம்பிக்கும்போது மனைவி கேட்க … முடியும் படம் இன்னொரு பாகம் வரப் போவதை சொல்லாமல் சொல்கிறது. நிச்சயமாக காத்திருக்கலாம்.


