படம் சொல்லும் பாடம் – 072
#MovieWatching #படமும்பாடமும் ; 012 / 365 / 2023 #Masaan Netflix
” Life has multiple pages. Never settle with the one that happened in the past ! ”
ஒரு சிறு எதிர்பார்ப்பு கலந்த இள வயதுக்கே உரிய செயல் / அதில் ஒரு தற்கொலை / அது சார் நிகழ்வுகள் !
மகளின் செயலால் தலைகுனியும் அப்பா / பின்பும் தொடரும் அப்பா மகள் உறவு
இலஞ்சம் பெற்று வாழும் காவல் துறை அதிகாரி
தாத்தா பேரன் போன்ற ஒரு அழகான உறவு. கங்கையில் எறியப்பட்ட காசுகளை பொறுக்கும் போட்டி
பிணத்தை எரிக்கும் வாழ்வியல் / அங்கு மிகைப்படுத்தாமல் கிடைக்கும் ஒரு அப்பா மகன் உறவு
தாழ்த்தப்பட்ட சமூக / உயர் சமூக காதல்
அங்கே நிகழும் ஒரு இறப்பு.
மீண்டும் எழுந்து வரும் ஒரு பெண் ஆளுமையின் வாழ்வியல்
….. இன்னமும் நிறைய
எத்துணை கிளைக்கதைகள் ஒரு கதைக்குள் !!
Sanjay Mishra என்கிற ஒரு நடிகனின் அசாத்திய நடிப்பை பார்த்து வியந்து எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. ( எழுந்து நின்று கை தட்டினேன் ! ) என்ன ஓர் இயல்பான நடிப்பு வாழ்வியல் ! உடல் மொழி ஆழமாகப் பேசுகிறது ! சில இடங்களில் கண்ணீர் வருகிறது. சில இடங்களில் நெஞ்சத்தை அழுத்துகிறது..நடித்தால் இப்படி நடிக்க வேண்டும். Comedian ஆக அவர் நடித்தது அநேகமாக அவருக்கு கை கொடுக்கிறது என தோன்றுகிறது. Comedy எளிதான ஒன்று அல்ல. அதை ஒருவர் சிறப்பாக செய்தால் …மீத எந்த Role ம் அவரால் சிறப்பாக செய்ய முடியும் !
ஒவ்வொரு Character ம் … தன்னை போட்டி போட்டு முன்நிறுத்துவதால் எந்தக் காட்சியும் சலிக்கவில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஒரு முறை பார்த்தால் அந்த அழகு நமக்கு புரியாமல் கூட போகலாம். அப்பா மகள் உறவில் சிக்கல் வரும்போது அதை தீர்க்கும் முறையும் சரி, காதலில் எதிர்பாராத ஒன்று நடக்கும்போது அதை எதிர்கொள்வதும் சரி, அநியாயம் என்றாலும் அதை சொன்ன வாக்குறுதிக்காக நியாயமாக காப்பாற்ற முயல்வதும் … என்ன சொல்வதென்றே தெரியா உளவியல் magic அழகாய் அங்கே நிகழ்கிறது !
வாரணாசி அழகு. ஆனால் வாரணாசி இவ்வளவு அழகா என்பதை சொல்லும் இன்னொரு படம் இது.
ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதை. அதிலும் முடிவு .. ? அப்போது பின்னே ஒலிக்கும் பாடல் … ரசித்து வாழ்ந்திருக்கிறார் Director !
இந்தியப் படங்களின் உயிர் அதன் Cultural வாழ்வியலில், உணர்வு நுணுக்கங்களில், சமூக கட்டமைப்பில் நடக்கும் ஏற்றத் தாழ்வுகளில் இருக்கிறது. அதை சரியாக திரையில் கொண்டு வந்தால் உலகப்படங்களில் இந்தியப் படங்கள் பெரும் உயரம் பெறும். பெற வேண்டும்.
படம் நிறைவடையும் போது நமக்குள் பல கேள்விகள். பல பதில்கள். அனைத்தும் அவரவர் வாழ்க்கையை பற்றி – வாழ்ந்த விதத்தை பற்றி !!