படம் சொல்லும் பாடம் – 073
#படமும்பாடமும் ; 013 / 100 / 2023 Netflix
” Freedom comes from Choices. Never miss a Choice that Offers You Freedom – at any Cost ! ”
” உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா ? ”
” இல்லை ”
” உங்களுக்கு என்ன வயது ? ”
” 24 ”
” இன்னமும் ஆகலையா ? என் friend க்கு குழந்தையே இருக்கு ”
” உன் வயது என்ன ? ”
” தெரியாது ”
” அய்யய்யோ … அந்த pipe ஐ தொடாதீங்க .. அது உயர் ஜாதியினருக்கு ! ”
” அம்மா .. மாப்பிள்ளை Tobacco சாப்பிடறதா தம்பி சொல்றான். ”
” அதெல்லாம் உனக்கு பழகிடும். உங்கப்பாவை நான் முதல் இரவில தான் ஆளையே பார்த்தேன் ”
இந்த Dialogue Sequences போதும். இந்த படம் இருக்கும் கிராம சூழலை புரிந்து கொள்ள !
இங்கே இருந்து ஒரு Skater Girl வருகிறார் என்றால் …? அதுதான் கதை.
வெளிநாட்டு ஆனால் இந்திய வம்சாவழிப் பெண்ணாக வரும் பெண்ணின் நடிப்பும், Skater Girl ஆக வரும் பெண்ணின் நடிப்பும், Skater Girl ன் தம்பியும் தான் படத்தின் அச்சாணி.
கிராம வாழ்வியல், அதன் இயல்பு, அதன் பிரச்சினை என்று கதைக்களம் அசத்துகிறது !
என்னவோ தெரியவில்லை .. படம் பார்க்கும்போது மனதில் ஒரு நெருக்கமான, நெகிழ்வு உணர்வு. பெண் குழந்தைகள் என்றால் அப்பாவாக மனம் நெகிழ்ந்து போவது இயல்பு தான் போல !
நீங்கள் பார்க்கும்போதும் உள்ளே என்னவோ செய்யும்.
” அவளுக்கு அது பிடிக்குது. சுதந்திரமா உணர்றா .. செய்யட்டுமே ”
இந்த ஒரு வரி தான் பல குழந்தைகளின் திறமைக்கு அடிப்படை. சுதந்திரத்தின் வேர்.
அதை நமக்கும் நம் குழந்தைகளிடம் சொல்ல வைக்கும் – இந்தப் படம் !
#100Moviesin2023 #Zenlp #ZenlpAcademy Zenlp Academy
You may also like
படம் சொல்லும் பாடம் – 107
- May 20, 2025
- by Jayasekaran Zen
- in படம் சொல்லும் பாடம்

படம் சொல்லும் பாடம் – 106

படம் சொல்லும் பாடம் – 105
