படம் சொல்லும் பாடம் – 074
#படமும்பாடமும் ; 014 / 100 / 2023
” You are the Captain of Your Ship ”
படங்களில் இரு வகை உண்டு. ஒன்று கற்பனை. இன்னொன்று … உண்மையை அடிப்படையாக கொண்டது.
இரண்டாம் வகைப் படம். Jessica Watson என்று ஒரு Champ. இள வயதில் / 16 வயதில் / 210 நாட்களில் / 18000 plus Nautical Miles ஐ கடந்து / உலகை படகில் சுற்றியவர் / என்னும் சாதனையை வைத்திருப்பவர். அவரின் படம் இது !
அப்பா அம்மா தங்கை தம்பி மற்றும் Coach – என்ற அழகான உலகம் பின்னே தன் இருப்பை பலமாக வழங்கிக்கொண்டே இருக்க – அந்த 16 வயது ஆளுமை தன்னை முன்னிறுத்தி ஆழக் கடலில் முன்னே செல்கிறது. வழி நெடுக நமக்கு செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
” நீதான் Captain. உன் முடிவு தான் இறுதி முடிவு. விளைவு என்னவாக இருந்தாலும் உன்னுடன் நாங்கள் இருக்கிறோம் ”
என்று சொல்லும் குடும்பம் கிடைக்க வேண்டும். கிடைத்தவர்கள் வாய்க்கப் பெற்றவர்கள். கிடைக்காதவர்களுக்கு இயற்கை துணை இருக்கும்.
” நான் Explore செய்யணும். ஏன்னா நான் யார் ன்னு எனக்கு தெரியணும் ”
என்கிற வரிகள் நமக்குள் என்னவோ செய்கின்றன.
” Sorry Prime Minister. நான் Hero இல்லை. ஒரு சாதாரண பெண். ஆனால் என் கனவை உணர்ந்த பெண். தன் கனவை உணரும் சாதாரண எவரும் இதை சாதிக்க முடியும் ”
என்று 16 வயது பேசும்போது .. Travel Monk அந்த ஆளுமைக்குள் வந்தது புரிய வருகிறது !
பார்த்துவிட்டு உங்களின் பார்வையை comment ல் Share செய்யலாம்.