படம் சொல்லும் பாடம் – 078
#படமும்பாடமும் ; 018 / 100 / 2023 Amazon Prime
” Only One can Predict it. That’s You ! ”
Tennis ல் அவர்களை கவனித்து இருக்கிறேன். பெரும் Chapmions என்று தெரியும். அவர்களுக்கு பின் அவர்களின் தந்தை தாய் இருப்பதையும் கவனித்து இருக்கிறேன். ஆனால் … ? அதற்கு பின் இருக்கும் வலி, தையிரியம், தீர்க்கமான முடிவு, எதிர்காலம் நமக்கே என்று கொண்டாடும் முழு உரிமை .. படம் முழுக்க உற்சாகமும், உணர்வும்.
பெண் குழந்தைகளா உங்களுக்கு ? இரு பெண் குழந்தைகள் இருக்கிறதா ? 5 பெண் குழந்தைகளா ? பார்க்க வேண்டிய படம். ஒரு அப்பா அம்மா எங்கே கோபப்பட்டு எழ வேண்டும், எங்கே அருகே நிற்க வேண்டும், எங்கே விலக வேண்டும் … என்ன ஒரு பாடம் இந்தப் படம் !
Will Smith – ஒரு மிகச்சிறந்த நடிகன் என்று எவனாவது சொன்னால் அவனுக்கு இன்னமும் நடிப்பு பிடிபடவில்லை என்றே அர்த்தம். Will Smith ஓர் வாழ்வியல் கலைஞன். அப்பாவாக நிற்கும், நடக்கும், பேசும், அடி வாங்கும், பெண் விளையாடும்போது Gallery யில் உட்காராமல் நடந்து கொண்டே இருக்கும் அந்த உணர்வு .. என்ன ஒரு கலைஞன் ! அம்மா தங்கைகள் அக்கா என்று குடும்பமே வாழ்கிறது.
” இந்த Deal ஐ ஏற்றுக்கொள்கிறாயா ? ”
Deal ? 3 Million Dollars ! ஆனால் Venus சொல்லும் …
” என் ஆட்டத்தை ஒரு முறை பார்க்கட்டுமே ”
சில வருடங்களுக்கு பின் Venus deal ஐ 12 million dollars ல் முடிக்கிறார் ! ஆம். 4 மடங்கு !! தன் திறமை மீது அப்படி ஒரு நம்பிக்கை.
” நீ Venus Shadow விலேயே இருக்கிறாய் என்று எனக்கு தெரியும். ஆனால் .. நீ தான் உலகின் மிகச்சிறந்த Tennis Champion ஆக வருவாய் ”
என்று தந்தை Serena விடம் சொல்லும்போது Goosebumps !! ஆம். அப்படித்தான் எதிர்காலத்தில் ஆனார் Serena ! தந்தை என்றால் அப்படி கணிக்க வேண்டும்.
படத்தின் கடைசியில் Richard இரு குழந்தைகளுடன் விளையாடும் பேசும் சிரிக்கும் அந்த video காட்சிகள் … காண் வழிக் கவிதை !
சில படங்கள் நமக்குள் வந்துவிடும். பின் கடைசி வரை வாழும். My list ல் இருக்கிறது. ஒரு Trainer ஆக, Counsellor ஆக மீண்டும் மீண்டும் இன்னமும் பார்க்க வேண்டிய படம் இது. பார்ப்போம்.
You may also like
படம் சொல்லும் பாடம் – 107
- May 20, 2025
- by Jayasekaran Zen
- in படம் சொல்லும் பாடம்

படம் சொல்லும் பாடம் – 106

படம் சொல்லும் பாடம் – 105
