படம் சொல்லும் பாடம் – 079
” Time – The Eternal Training Model, will bring all realizations. “



Oscar வென்ற படம். என்ன இருக்கக்கூடும் என்று யோசித்து பார்க்க ஆரம்பித்தால் … மொத்தமே 6 Characters ! ஒரு அறை. ஒரு Laptop. ஒரு Wheel Chair. ஒரு Sofa. ஒரு Walker. The Mummy ஞாபகம் இருக்கிறதா ? அதில் மிக அழகாக வந்த #BrendanFraser தான் இந்த Whale பட கதாநாயகன் -Whale போன்ற உருவத்துடன் !!!
குடும்பத்தில் இருந்து பிரிவு, மகளை மனைவியை விட்டுவிட்டு வெளியேறுதல், இன்னொரு உறவை அதுவும் சமூகம் விரும்பா உறவை தேர்வு செய்தல், சில காலங்களுக்கு பின் அந்த உறவு இறந்து போதல், வருத்தத்தை கோபத்தை மன அழுத்தத்தை – உணவில் காட்டுதல் – உடல் எடை கூடிக்கொண்டே போகுதல் ( என்ன ஒரு Prosthetic Make Up !! வாய்ப்பே இல்லை Just WoW ), தனித்து வாழ்தல், வருமானத்திற்கு மட்டும் ஒரு online வகுப்பை ( தன் முகத்தை காண்பிக்காது ) நடத்துதல் … என்கிற காலகட்டத்தில் … நல்ல நட்பு ஒன்று நம்மை பாதுகாக்க வர, மகள் வர, மனைவி ஒரு முறை வர, யாரோ ஒருவன் Jesus Christ ன் New Life என்று வர … ஒரு மனிதனுக்குள் ஏற்படும் ” தன் தவறுகளை உணர்தலும், தன்னை மீட்டெடுக்க முயல்வதும் தான் கதை !



Brendan Fraser ன் கண்கள் பெரும்பாலும் பேசிவிடுகின்றன. மீதத்தை உடலும் குரலும் பேசிவிடுகிறது ! மனிதர் கண் கலங்கும் போது நமக்குள் என்னவோ செய்கிறது. மனிதர் மன அழுத்தத்தில் சாப்பிடுவதை பார்த்தால் பயம் வருகிறது. நடிப்பின் நிறைய பக்கங்களில் ஏனோ தெரியவில்லை – கமல் ஞாபகத்தில் வருகிறார். என்ன ஒரு அருமையான வாழ்வியல் நடிப்பு !! நட்பாக வரும் சீனப் பெண்மணி, New Life இளைஞன், மகள், மனைவி, உணவு கொண்டு வரும் ஒருவன் .. என்று அனைவரும் அவரவர் காட்சிகளில் அசத்துகின்றனர்.



ஆரம்பித்தால் முடியும் வரை படம் உள்ளே சில புரிதல்களை உருவாக்குகிறது.









முகம் காட்டாமல் நடத்தும் online ல் முகம் காட்டிவிட்டு பேசும் காட்சி தான் படத்தின் அடி நாதம் ! அதற்கு பின் வீசி எறியப்படும் Laptop பலரின் தேவை அற்ற பிம்பங்களை உடைக்கக்கூடும் !
அப்படியான அனுபவத்திற்கு முன் வாழ்த்துக்கள்.


