படம் சொல்லும் பாடம் – 082




” First Dream is always … by Coach, Then, by the Player “



” நான் இறந்த பிறகே என் அருமை புரியும் “
என்று அந்த Coach சொல்கையில் … கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வருகிறது. என்ன ஒரு ஆளுமை ! சாலையின் சந்திப்புக்குள் கிடைக்கும் சிறு இடம் தான் பயிற்சிக்கான இடம் ! பணம் பெற்றுக் கொள்ளாது, தன் சொந்தப் பணத்தில் weight lifting கிற்கான அனைத்தையும் செலவு செய்து .. ” ” ஒலிம்பிக் Champions ” ஐ இங்கே உருவாக்குகிறேன் ” என்று அவர் பேசும்போது .. அங்கே அரசாங்கம் என்ன செய்கிறது என்று ஒரு கேள்வி பெரும் வலியுடன் எழுகிறது !
எகிப்து ! இங்கே ஒரு சாதாரண கிராமத்தில், அல்லது சிறு நகரத்தில், சாலையோர சந்திப்பில் இருந்து Champions, அதிலும் பெண் Champions, அதிலும் Weight Lifting ல் … உருவாகும் களம் தான் கதை ! அந்த Coach ஐ பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நடையும், உடையும், உடலும், பேச்சும், பெண்களை சக ஆண்களிடம் இருந்து வரும் Comments களில் இருந்து காப்பதும் .. நாட்டில் இதே போல எத்தனை பேர் Coaches ஆக இருக்கிறார்களோ ? அரசாங்கம் என்று ஒன்று இருந்தால் இவர்களை காக்க வேண்டும். இவர்களால் ஒரு நாட்டையே வீறு கொண்டு எழ செய்ய வைக்க முடியும்.



தோள் பட்டை வரை தூக்கி விட்டு அதற்கு மேல் தூக்க முடியாது .. Mind ல் மீண்டும் மீண்டும் தோற்கும் பெண் தான் நாயகி. அவள் எப்படி அதை வெல்கிறாள் என்பது கதை. கதையா இது ? முதலில் இப்படி ஒரு நாட்டில், இப்படி ஒரு சூழலில், இப்படி ஒரு பெண்ணீய சிந்தனைகளுக்கு நடுவே … ஓர் Olympic Champion ஐ எதிர்பார்க்க முடியுமா ? நினைத்துக் கூட பார்க்க முடியுமா ? Hi fi ஆக பயிற்சி செய்பவர்களுக்கு நடுவே .. அந்த சாலையோர அல்லது சாலை சந்திப்புக்கு இடையே இருக்கும் இடம் கிட்டத்தட்ட படத்தின் நாயகன் !
ஒரு Coach ஆக, ஒரு Trainer ஆக, ஒரு Counsellor ஆக, படம் மனதுக்கு மிக அருகில் நிற்கிறது. என்ன ஓர் making ! படம் ஆரம்பித்து 33 ஆம் நிமிடம் Champ தன் பிரச்சினையை வீழ்த்துகிறாள். அங்கே இருந்து Champ ன் பயணம் !!
Champ வெற்றி பெறும்போது அந்த Coach ஆடுகிறாரே .. அது ஒன்று போதும் – திறமையை கவனிக்கும் எவருக்கும் கிடைக்கும் மகிழ்ச்சி அது என்று புரிந்து கொள்ள ! ஆங்காங்கே Praise The Prophet வந்து கொண்டே இருக்கிறது. Spiritual Dissociation !



தன் இறப்பை துல்லியமாக சொல்லும் அந்த Coach ஐ என்னவென்று சொல்வது ? அவர் ஆடும் ஆட்டம், பாடும் பாடல்கள், கோபப்படுவது, பணத்திற்காக கெஞ்சும்போது தன் நிலையை சொல்வது .. படம் Champion பற்றி என்று இருக்கலாம். ஆனாலும் Coach தான் Champ and Hero !
” நான் பெண் .. நீ ஆண். ஓரு பெண்ணாக எப்படி தூக்குவாள் என்று நான் செய்து காட்டுகிறேன். ஒரு ஆணாக எப்படி தூக்குவான் என்று நீ செய் ” என்கிற அந்த வரி தன்னலம் இல்லா அனைத்து Coach களுக்கும் சமர்ப்பணம்.
Just Wow !





