படம் சொல்லும் பாடம் – 080
#படமும்பாடமும் ; 020 / 100 / 2023 Netflix
” Not the Facilities but The Hunger to Achieve is the One that Brings everything .. to a champ “
” Speak through What you have as Skill, Not through Words ! “



” வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும் நான் ஏன் போட்டி போட வேண்டும் ? தங்கமே என் இலக்கு ! “
அந்த Champ ன் state Jharkhand. இந்தியாவின் இரண்டாம் ஏழ்மை மாநிலம். Ratu என்கிற கிராமத்தில் இருந்து வரும் இந்தப் பெண் ஆளுமை தான் கதை ! ஆம். அவளே ( உரிமையோடு ) கதை !!
” இந்த கிராமத்தில் பெண்கள் செய்ய என்று எதுவும் இல்லை. “
என்கிற வாழ்வியலில் இருந்து ஒரு Champ !



மருத்துவ மனையில் வேலை செய்யும் அம்மா … India Jerkin அணிந்து கொண்டு … Auto Driver ஆக இருந்து கொண்டு … தரை கூட்டும் அப்பா … சோளக்கருதை திருடித் தின்னும் மகள் .. என்று ஒரு குடும்பம். இந்த மகள் தான் Champ என்றால் நம்ப முடிகிறதா ?
Europe ல் பெண்கள் ஆண்கள் என்று பேதம் இல்லை – வேலைகளில் ! ஆனால் இந்தியாவில் அதிலும் Jharkhand போன்ற மாநிலங்களில் .. ” பெண் இதற்குத்தான் ” என்கிற மனநிலை உண்டு. இந்த Champ அதையும் எதிர்த்து வெல்ல வேண்டியதாக இருக்கிறது.
ஒரே ஒரு முறை தோற்றால் போதும். இந்திய Media எப்பேர்ப்பட்ட Champion ஐயும் அழ வைத்து விடும். London Olympics க்கு பின் அவரையும் அழ வைக்கிறது. அவ்வளவு தான் நம் Sport புரிதல் ! அது மட்டும் அல்ல… அவருக்கு தோள் வலி வந்தும், வெளிநாடுகளில் பயணம் செய்யும் போது மன ரீதியாக இருக்கும் அழுத்தத்தை மீட்டு வெற்றி பெற வேண்டிய நிலை வந்தும் Rio Olympics க்கு அவருடன் சென்றது யார் என்று நினைக்கிறீர்கள் ? இரண்டு Officials ம் ஒரு Cook ம் ! அங்கே சாப்பாடே கிடைக்காது இல்லையா ? 2016 ல் இது ! அரசாங்கத்தை என்னவென்று சொல்வது ? Make in India என்று Poster ஒட்டிக்கொண்டு இருந்த காலம் அது !!



முடிவு நமக்குள் என்னவோ செய்யும். செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் வழக்கம் போல .. காரணம் கண்டுபிடிக்கும் ஆளுமைகளாகவே தங்கள் வாழ்வை வாழ்வார்கள். Champions ? அடுத்த நிலையை நோக்கி பயணிப்பார்கள். அப்படித்தான் தீபிகா வும் !





