படம் சொல்லும் பாடம் – 081
#MovieWatching 021 / 100 / 2023
” Exactly what happens at Break Point makes One Either Winner Or Loser “



ஒரு Documentary என்னென்னவெல்லாம் நம்மை யோசிக்க செய்யும் ? வெற்றி பெறும் போது / தோல்வி பெறும்போது … Break Point என்று ஒன்று வரும். அப்போது .. மனதில் என்ன ஓடும் ? எதை அவர்கள் சரியாக செய்தார்கள் ? எதை அவர்கள் செய்ய மறந்தார்கள் ? என்கிற குறிப்பான புள்ளியை நோக்கிய இந்த Documentary – சிறப்பான ஒன்று என்பதை மனதார உணர முடிகிறது.
படம் மட்டுமே பார்த்து கற்க வேண்டும் என்று எதுவும் இல்லை. Documentary யிலும் கற்கலாம். In Fact … Documentary யில் … Fact ஆக கற்றுக்கொள்ளலாம். ஆம். கண் முன்னே நடந்த நிகழ்வுகளில் இருந்து கற்பது இன்னமுமே சிறப்பான ஒன்று !



#OnsJabeur ன் அந்த Chapter கண்ணுக்குள் நின்று கொண்டே இருக்கிறது. #MariaSakkari என்கிற ஒரு Champ Six Pack அளவிற்கு ..Gym ல் உழைத்து, அட்டகாசமாக தயாராகும் போது .. நம்ம வீட்டு பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டே Championship ற்கு தயாராகிறார் Ons !. மனம் தான் First மக்களே !! Tunisia வில் இருந்து உருவாகும் அந்த Champion ஐ பார்க்கும்போது நம் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு Champ ஐ பார்ப்பது போலவே இருக்கிறது ! அதிலும் தங்கை மகளை இடுப்பில் வைத்துக்கொண்டு Final க்கு தயாராகும் காட்சி எல்லாம் .. கவிதை !



அப்பாவுடன் பயணித்து, தான் வெற்றி பெற்று அப்பாவுக்கு அதை கொடுக்கும் Moments, தன் Role Model க்கு எதிராக தானே களத்தில் இறங்க வேண்டிய தருணம், தன் கோபத்தை கட்டுப்படுத்த இயலா ஒரு Player … என்று பலரின் பக்கங்கள். Personal பக்கங்களும் !



விவரிக்க வார்த்தைகளே இல்லை. எம் பயிற்சியாளர் குழுவிற்கு ஒரு சவாலை கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு Chapter ஐயும் ஒவ்வொருவராக எடுத்துக்கொண்டு … அதில் வரும் நிலைகளை / மனம் கொண்டு ஆராய்ச்சி செய்து அதை ஒரு நிகழ்வாக submit செய்ய வேண்டும். செய்வார்கள். அவர்கள் அனைவர்க்கும் இது அவர்களின் – மனங்களின் புரிதல்களின் உச்சமாக இருக்கக்கூடும். வாழ்த்துகள்.
100 Movies / Documentaries பற்றி எழுத வேண்டும் என்று எடுத்திருக்கும் இலக்கு … இந்த வருடத்தின் முக்கிய எழுத்தாக அமையக்கூடும். பின்பு .. இதை ஒரு புத்தகமாக வெளியிடும் எண்ணம் இருக்கிறது. பயணிப்போம்.


