படம் சொல்லும் பாடம் – 083
#MovieWatching : 023 / 100 / 2023



” I can because I think I can “



Sindhu வை அவர் தோற்கடித்த போது, Saina வை அவர் தோற்கடித்த போது … யார் இது ? என்று கவனிக்க ஆரம்பித்து .. அவர் பற்றிய articles ஐ படித்து, அவரின் Series ஐ Amazon Prime ல் பார்த்த போது தான் புரிந்தது – அவர் ஏன் Champ என்பது !
சிறு வயது முதலே குழந்தைகள் ஏதோ ஒரு விளையாட்டில் – involved ஆக இருந்தால் – அவர்களின் DNA என்னவோ ஒன்றை நமக்கு சொல்கிறது என்று அர்த்தம். அப்படித்தான் இருக்கிறது Marin ன் கதை. ” ஏன் பிடித்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் .. பிடித்திருக்கிறது ” என்று Shuttle Cock ஐ அவர் பார்க்கும் பார்வையில் ஒரு Olimpic Champion அவருக்கு மட்டும் தெரிகிறது. அவர் எப்படி அதை வெல்கிறார் என்பது தான் இந்த Series. அவரின் உடல் காயம், Covid, ஏமாற்றம், வெற்றி, போட்டி … அனைத்தையும் ஒரு Champ மனநிலையில் எப்படி கவனிக்கிறார் என்பதே Series. மிக மிக முக்கியமான ஒன்று – மனநிலையை முன்னேற்ற நினைக்கும் எவருக்கும். Court ல் விளையாடும் போது .. சட்டென விழுந்து காலை முறித்துக் கொள்ளும் அந்த தருணத்தில் நமக்கு ” பக் ” என்று இருக்கிறது. வேறு நாடு என்றாலும் Champion ஆயிற்றே ! அதில் இருந்து அவர் எழுந்து வரும்போது நமக்கு ” இப்படி ஒரு மகள் ” இருக்க வேண்டும் என்றே தோன்றும் – ஆம். அப்படியான மன உறுதி. கூர் பார்வை. தொலை நோக்கு இலக்கு ! Just WoW Carolina Marin !



ஒரு Coach என்னவெல்லாம் செய்ய முடியும் ? அதைத்தான் #fernandorivas செய்கிறார்.
” Ordinary ஆக நீ இருக்க … அதிகம் கடினப்பட தேவை இல்லையே. சும்மாவே இருந்து விட்டு போகலாம் ” என்று கோபப்படுகிறார்.
” சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறாய். ஆக .. தோற்க முடிவு செய்திருக்கிறாய் ” என்று சிரிக்கிறார்.
” ஒற்றை காலில் Practice இன்றைக்கு ” என்னும்போது நமக்கே வில்லனாக தெரிகிறார்.
அதே ஒற்றைக்காலில் practice செய்யும்போது Carolina Marin ஐ பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஆனால் … உறுதி பெரும் ஆச்சர்யம் – இருவரிடமும்.
Champ எல்லாம் நமக்குத்தான் ! Coach க்கு Carolina Marin ஒரு ” சொல்வதைக் கேள் ” குழந்தை தான்.



Series முடியும் போது – சட்டென முடிந்து விட்டதே என்று தோன்றுகிறது.
” Season 2 விரைவில் வர வேண்டும். Champ ன் பயணத்தை இன்னமும் கவனிக்க வேண்டும் “
என்கிற குரல் உங்களை, உங்கள் sport ல் ஈடுபாடு உள்ள குழந்தைகளை அழைக்கும். அநேகமாக அது அவர்களின் உலகை மாற்றவும் கூடும்.
முன் வாழ்த்துகள்.