படம் சொல்லும் பாடம் – 084
#MovieWatching ; 024 / 100 / 2023 ZEE5
” உண்மையான புரிதலுக்கு மொழி தேவை இல்லை “



முதல்வர் M. K. Stalin அவர்களுக்கு ஒரு மனம் நிறை வேண்டுகோள். இந்தப் படம் – தமிழ்நாடு அரசினால் சிறப்பு பிரிவில் ( ஒன்றை உருவாக்கலாம் ) கௌரவிக்கப்படும் படமாக அறிவிக்க வேண்டும். அதே போல வாரணாசியிலும், இராமேஸ்வரத்திலும் ( இராமநாதபுரத்தில் ) ஒரே நேரத்தில் போட்டியிட விரும்பும் எந்த ஒரு தலைவரும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு முடிவெடுத்தால் – இன்னமும் நல்லது – அவர்களின் அரசியல் வாழ்விற்கு !
முதலில் அயோத்தி என்ற பெயரை வைத்ததற்கே திரைப்படக் குழுவை பாராட்ட வேண்டும். அதே போல இந்தப் படம் பார்க்கப்பட வேண்டியது இங்கே மட்டும் அல்ல. வடக்கில். இதை இந்தியில் மொழி பெயர்த்து .. அங்கே காட்டப்படும் பட்சத்தில் – சில கேள்விக்குறிகளை அங்கே சில மனங்களில் உருவாக்கும். சில தேவையற்ற சடங்குகளை / பிடிவாதங்களை / பண நோக்கங்களை / இந்தப் படம் ஆணி வேர் வரை கேள்வி கேட்கும்.



அந்த அப்பா, அம்மா, பெண், பெண்ணின் தம்பி .. இந்த 4 Characters தான் படம். அப்பாவின் மேல் நமக்கு வெறுப்பு வருவது அவரின் வெற்றி. அம்மாவை பார்க்கும்போது கண்ணில் நீர் வருவது அவரின் பலம். உண்டியலை உடைக்கும் ஓர் காட்சியில் ” அருகே இருந்தால் கட்டிக்கொள்ளலாம் ” என்று தோன்ற வைப்பதில் தம்பியின் நடிப்பு பெரும் பலம். அனைத்திற்கும் மேல் … கண்களால் நடிக்கும் அந்த மகள் ! Just WoW !! அப்பாவை தள்ளிவிடும் ஒரு காட்சியை விட, ” நான் Bathroom போகணும் ” என்று இரண்டாம் முறை சொல்லும்போது – உள்ளே அதிர்வு வருகிறது நமக்கு.
சசிகுமார் இந்த மாதிரி 10 படங்கள் செய்து விட்டு தான் ஒரு நடிகர் என்று பெருமைப்பட்டு கொள்ளலாம். கடைசியாக தன் பெயரை சொல்லும் போது, இராமேஸ்வர தீர்த்தம் கொண்டு வரும்போது, பணத்தை கட்டும்போது .. என்று மனிதர் கண்களை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
எனக்குள் எனக்கு நடந்த Accident ம் அப்போது உதவிய மனிதர்களுமாக நிறைய ஞாபகங்கள். அநேகமாக Thinker Kumar இப்படி ஒரு விபத்தில் உதவியை யாருக்கோ செய்ததை பகிர்ந்த ஞாபகமும் ! நீங்களும் இந்தப் படத்தை பார்க்கும்போது உங்களுக்கு அநேகமாக நீங்கள் செய்த உதவி அல்லது உங்களுக்கு கிடைத்த உதவி ஞாபகத்தில் வரும். வர வேண்டும். அதுதான் படத்திற்கு செய்யும் மரியாதை. இந்தப் படத்தின் Director க்கு எம் மனம் நிறை மகிழ் வாழ்த்துகள்.



பெயரை கேட்டவுடன் வந்து கட்டிக்கொள்ளும் அப்பாவின் இதயம் தான் இந்தியா ! அந்த அழகான இதயத்தில் கழிவுகளை கொட்ட முயலும் அனைத்துக் கட்சிகளின் நோக்கங்களுக்கும் .. இந்தப் படம் ஒரு தீ வைப்பு நிகழ்வு ! Director உங்களுக்கு அறிந்தவர் எனில் – tag செய்யவும். அவருக்கு இந்தப் பாராட்டு சென்று அடைய வேண்டும் என்று மனம் விரும்புகிறது.


