படம் சொல்லும் பாடம் – 085
#MovieWatching : 25 / 100 / 2023 Netflix
” Everyone’s Feel is Different. “



” நான் ஒரு ஆண் ” என்று என்னால் உரக்க சொல்ல முடியும். ” அதே போல ” நான் ஒரு பெண் அல்லது நான் ஒரு ஆண் ” என்று நீங்களும் சொல்லிவிட முடியும். ஆனால் .. நான் ஒரு Homo என்றோ அல்லது Lesbian என்றோ .. அப்படி வாழும் சிலரால் சொல்லிவிட முடியுமா ? அப்படி சொல்ல முடியாத போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன ? சொல்லும்போது உலகம் அவர்களை எப்படி பார்க்கிறது ? அவ்வளவு தான் படத்தின் கரு.
” இது ஒரு நோய் அல்ல. இது தவறும் அல்ல. ” என்று எப்போது உங்களுக்கெல்லாம் புரியும் என்று ஆணும், பெண்ணும் பேசும் இடங்களில் அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் வலி புரியும். அதையும் விட …ஒரு பெற்றோராக நீங்கள் இருந்து உங்களின் மகன் அல்லது மகள் இப்படியான வாழ்வில் இருந்தால் எப்படி அதை புரிந்து கொள்வது தான் படம். அவர்களுக்கு – நாம் சொல்வது புரிய வேண்டியது இல்லை. ஆனால் …. அவர்கள் சொல்வது நமக்கு புரிய வேண்டும் என்கிற கதைக் களம். எளிதல்ல இது. படம் பார்க்கும்போதே நம்மால் சில இடங்களில் ஒத்துக்கொள்ள முடியாது போகும். ஆம். அப்படித்தானே நம் ” நம்பிக்கைகள் ” நம்முள் வாழ்கின்றன !
இந்த 100 படங்களில் இது ஒரு புதிய கோணம். பார்வை. புரிதல். எதிர்காலத்தில் இப்படியான மனிதர்களை நாம் சந்திக்க வேண்டியது வரலாம். நம் வீட்டில், வியாபாரத்தில், நட்பில், பொது வாழ்வில் – எங்கோ. அப்போது என்ன இது என்று அதிர்வதை விட – இந்தப் படம் மூலம் இது என்ன என்று புரிவது நல்லது. இயக்குனருக்கு வாழ்த்துகள்.
மீண்டும் முதல் Paragraph ஐ படித்தால் ….
” நான் ஒரு ஆண் ” என்று என்னால் உரக்க சொல்ல முடியும். ” நான் ஒரு பெண் அல்லது நான் ஒரு ஆண் ” என்று உங்களாலும் சொல்லிவிட முடியும். ஆனால் ….


