படம் சொல்லும் பாடம் – 086
#படமும்பாடமும் ; 086
” கணவன் மனைவி உறவில் சிக்கல் வந்தால் அது எந்த கொடுமையான உயரத்திற்கும் செல்லும். புரிதல் வந்தால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் சரி செய்யும். “



கணவன் மனைவி உறவு – பிரிவு – குழந்தை யார் பக்கம் ?, மிரட்டல், பிரச்சினை, Police, வந்த Police ன் குடும்ப நிலை, பிரிவு, புரிதல், மன்னிப்பு … Just WoW !
ஒரு படமாக சாதாரண படம். ஆனால் பாடமாக … ? ஒரு பயிற்சியாளராக, மன நிலை ஆலோசகராக … பெரும் பாடங்களை சுமக்கும் படம். என்ன ஒரு நிதானம் அந்த Police இடம் ! கணவன் மனைவி உறவின் பிரிவில் கூட தங்களின் Egoistic status தான் சரி என வாதிடும் மனைவியின் பெற்றோர் .. இன்றைய நம் பல பெற்றோர்களை முன்னிறுத்த கூடும்.
படம் முழுக்க Moving ல். ஆனால் காட்சிகள் மனதை Fixed ஆக மாற்றுகின்றன.
கடைசி சில நிமிடங்களில் அனைத்தும் மாறிப்போக .. கண்களில் ஈரம் வருகிறது. ஒரு Sorry அல்லது ஒரு புரிதலின் Hug ல் அனைத்தும் சிறப்பாக நடக்கிறது. சிரித்த முகத்துடன் செல்லும் கணவனின் last frame நிறைய Messages ஐ சொல்லாமல் ஆனால் சொல்கிறது !
யார் பார்க்க வேண்டும் ? ; யாரும். ஆனால் நிச்சயம் கணவன் மனைவி யாக. அல்லது திருமணம் செய்யப்போகிறவர்கள். அல்லது விவாகரத்துக்கு Apply செய்தவர்கள். தங்கள் பார்வையை கொஞ்சம் யோசிக்க வைக்கும் படம். பார்வை. கருத்து. பேச்சு.



பயணிப்போம். கற்போம்.