படம் சொல்லும் பாடம் – 089
” போர் போன்ற மனித தோல்வி இந்த உலகில் எதுவும் இல்லை “



ஒரு போரை Zoo வில் இருக்கும் விலங்குகள் பார்வையில் இருந்து, அதைக் காப்பாற்ற முனையும் ஒரு குடும்பத்தின் பார்வையில் இருந்து யோசிக்க முடியுமா ? அது தான் இந்தப் படம்.
ஹிட்லர் என்னும் மனித முகம் பொறுத்திக்கொண்ட அரக்கன் கொன்றது மனிதர்களை, மனித தன்மையை மட்டும் அல்ல. எத்தனையோ விலங்குகளையும் தான். பாவத்திலும் பெரும் பாவம் வாயில்லா அவை ஏன் சாகிறோம் என்று தெரியாமல் – செத்துப் போவது தான். மன சாட்சி என்று ஒன்று இருந்தால் காட்சிகள் நம்மை உலுக்கும். கேள்வி கேட்கும். ஏன் இப்படி ? என்று நமக்குள் மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும்.
நாம் இருக்கும் நாட்டில் … நமது வீட்டை இழந்து, தொழிலை இழந்து, பொருளாதாரத்தினை இழந்து, மனைவியை / கணவனை / மகனை / மகளை பிரிந்து, ஒரு Camp ல் தினம் தினம் சாவை எதிர்பார்த்து, வாழும் வாழ்க்கையை போல ஒரு வாழ்க்கை இருக்க முடியுமா ? அப்படி அவிழும் காட்சிகள் கண்களில் நீரை கோர்க்கின்றன.
ஹிட்லர் / Germany / உலக நாடுகள் / போர் சார்ந்த படங்களில் மனிதம் காட்சிக்கு காட்சி வழிந்து ரத்தமாகவோ அல்லது இறப்பாகவோ ஓடிக்கொண்டே இருக்கும்.
போர் வந்துவிட்டது. இருக்கும் Zoo வை காப்பாற்ற வேண்டும். அதை விட குறிப்பாக Zoo வை வைத்து Jew க்களை முடிந்த அளவு காப்பாற்ற வேண்டும். அது தான் கதை. Zoo – German படைகளுக்கு உணவுக்கான பன்றி வளர்க்கப்படும் இடமாக மாறுகிறது. இங்கே இருந்து திக் திக் தான்.











