படம் சொல்லும் பாடம் – 090
#படம்சொல்லும்பாடம் ; 090
” வாழ்வியல் அழகானது. இறப்பிலும் “
” வந்த வேலை முடிஞ்சதும் இங்கே யாரும் இருக்கப் போவது இல்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுவே நிஜம் “
Army என்று அல்ல. அனைத்திற்கும் Risk உண்டு. என்னைக் கேட்டால் இந்தியாவில் Road Drivers, Army யை விட Risk ல் இருப்பவர்கள் – எப்போது இறந்து போவோம் என்னும் கேள்வியில் ! என்ன Army இறப்பு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை !
படத்தில் எந்த Twist Turn என்றெல்லாம் எதுவும் இல்லை. இராணுவம். Terrorists. Hero. Villain. Hero வின் இறப்பு. அவ்வளவுதான் கதை. ஆனால் சாய் பல்லவி என்று ஒரு Actress இருக்கிறார். அனைவரையும் நடிப்பில் வெல்லும் அந்த ஆளுமையை … பெண் கமல் என்று சொன்னால் எந்த தவறும் இல்லை. அநேகமாக கமல் தான் இந்த ஆளுமையை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்து இருக்க கூடும்.
” எல்லோரும் பார்க்கிறப்ப தான அழக்கூடாது. இப்போ அழுதுக்கிறேன் “
என்னும் அந்த இடத்திலேயே படத்தின் முடிவு முன்னோட்டமாக மாறுகிறது.
எப்படி இப்படி ஒரு நடிகையை இங்கே இருக்கும் Directors தவற விடலாம் ? என்னும் கேள்வியை காட்சி வழியாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
மௌன ராகம் Part 2 வை மணிரத்னம் துணிச்சலாக எடுக்கலாம்.
கணவனின் இறப்பிற்கு பின் .. காட்சிகள் அனைத்தும் கவிதை. ஆம். வலி தான். ஆம் பேரிழப்பு தான். ஆம். இனி தனி தான். ஆனாலும் அவன் சொன்ன
” சிரிச்சிட்டே இருக்கணும் ” தான் பலம்.
அதெப்படி கணவன் இறந்தால் அழாமல் இருக்க முடியும் ? என்னும் கேள்வியை – ஏன் அழுது கொண்டே இருக்க வேண்டும் வரை கொண்டு போவதில் இருக்கும் நடிப்பின் வித்தியாசம் Classic !
சாய் பல்லவி யிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அவற்றிற்கான Characters ஐ வைத்து இருக்கிறீர்களா ? என்னும் கேள்வியை Directors பக்கம் தான் வைக்க வேண்டியதாக இருக்கிறது. கார்கி படத்தில் வரும் சாய் பல்லவிக்கும் இந்த சாய் பல்லவிக்கும் இருக்கும் நடிப்பு வித்தியாசத்திற்கு இணையாக வேறு யாரும் இல்லை என்றே தோன்றுகிறது.
Kashmir க்கு போகும் போது எல்லாம் தோன்றும் – ஏன் இந்த இடம் உலக அளவில் சொர்க்க பூமியாக மாற மாட்டேன் என்கிறது ? என்று. அதற்கு பதில் Terrorist டோ அல்லது அரசாங்கமோ அல்ல. அரசியல் ! அரசியல் மட்டும் தான் அங்கே உள்ள மக்களை கல்வி வழி முன்னேற்றத்தை தடுத்துக்கொண்டு இருக்கிறது.
பார்ப்போம் – kashmir அரசியல் என்று முடிவுக்கு வரும் என்று !
சிவகார்த்திகேயன் இன்னமும் நிறைய மாற வேண்டியது இருக்கிறது. இப்போது இருக்கும் Hero க்களில் தன்னை மாற்றிக்கொண்டு வேறு வேறு Characters செய்யும் பட்சத்தில் … தனுஷ் க்கான இன்னொரு போட்டியாக மாறக்கூடும் – நடிப்பில் !





