படம் சொல்லும் பாடம் – 093
#படம்சொல்லும்பாடம் : 093
” உணவு என்பதை மிக மிக அழகாகவும் பார்க்கலாம். மிக யதார்த்தமாகவும் பார்க்கலாம் “



முதலில் இப்படி ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கும் Netflix க்கு நன்றி. ஒவ்வொன்றிலும் அவ்வளவு அழகியலை கொண்டு வந்திருக்கும் நுட்பம் – Director க்கு பெரும் வாழ்த்துக்கள். Detailing செய்யாமல் இவ்வளவு நுட்பமாக உணவு சார் அழகியலை கொண்டு வர வாய்ப்பில்லை. உணவும், உணவு சார் இடமும், செயற்கையாய் உணவு பரிமாறப்படும் விதமும், அதில் உள்ள அழகியல் மற்றும் கடினமும், Casual ஆக உணவு பரிமாறப்படும் விதமும், அதில் உள்ள சுத்தம் அற்ற தன்மையும் அதே நேரத்தில் அதில் உள்ள யதார்த்தமும் கலந்த கதை தான் இந்தக் கதைக்கு முதுகெலும்பு. மேலே சொன்ன அனைத்தும் இந்தப் படத்தின் கதையிலும் parallel ஆக வடிவமைத்து இருப்பது தான் மிக மிக சிறப்பு.
அந்த கதாநாயகன் நிஜமாவே நடிக்கிறாரா அல்லது உண்மையான Chef ஆ ? என்ன ஒரு நேர்த்தி ! இயற்கை காட்சிகளை மனதில் இருத்தி …ஒவ்வொரு முறையும் உணவை அழகுபடுத்தும் விதம், அதற்கான Color Combos, பரிமாறும் இடத்தின் சுத்தம், தட்டின் சுத்தம்… என்று பல பரிமாண நடிப்பு. வழக்கமான Hero தோற்றத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு … இலேசாக கொஞ்சம் Weight போட்டிருக்கிற Middle age கதாநாயகன் ! அப்பாவிடம் கற்றுக்கொண்ட சமையல் கலையை அடுத்த உயரத்திற்கு எடுத்துக்கொண்டு செல்ல … அப்பா இறந்த பின் அவர் இருந்த மாளிகையை விற்று … அது தான் கதை. விற்க முடிந்ததா ? அல்லது அனைத்து செயற்கை தனங்களையும் ஒரு ஓரம் வைத்துவிட்டு .. மிக எளிமையான யதார்த்தமான மனிதனாக Chef ஆக வருகிறாரா ? என்பதில் கதை முடிகிறது. இது அனைத்திற்கும் காரணம் ஒரு பெண்… என்பது இன்னொரு அழகான Line !
அந்தப் பெண்மணி வழக்கமான Heroine தோற்றம் எல்லாம் இல்லாமல் எளிமையாக இருக்கிறார். சிரிக்கிறார். அழகாய் வடிவமைக்கப்பட்ட ஒரு உணவை சட்டென்று கலைத்து விட்டு எதையோ சிலவற்றை add செய்து சாப்பிடும் போது … சாப்பிட சொல்லும் போது கதை புரிந்து விடுகிறது ! பிடித்த கரத்தின் நினைவுகள், திருமணத்திற்கு முன் மனம் பகிர்தல், திருமணத்திற்கு பின் மீண்டு வருதல் .. என்று .. வாழ்க்கையை அழகாக ஆக்கிக்கொண்டே போகும் கதாபாத்திரம். புரிந்து கொள்ளும் பெண் இருந்தால் வாழ்க்கை வேறு தான் போல !



ஒரு சிலை – அப்பாவுக்கான ஒன்று – அந்தச் சிலை பேசும் …
” An Extraordinary as Everybody Else “
என்னும் ஒற்றை வரி பல விடயங்களை சொல்லி விடுகிறது.



என்று பல புரிதல்கள்.



படம் முழுக்க காட்சிகள் கவிதை. Danish Italian நாட்டுப்புறம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. பச்சையாய், நீலமாய், சிவப்பாய், மஞ்சளாய் … உணவு மட்டும் தட்டில் வைக்கப்படவில்லை. நிலப்பரப்புகளும் காட்சிகளாக கண்களுக்குள் !
Visual ஆக ஒரு வர்ணக் கவிதை.
Auditory ஆக ஆழமான வரிகள். தன்மையான குரல்கள்.
Kineasthetic ஆக உடல் மொழிகள்.
Taste ல் எச்சில் ஊறும் உணவுகள்.
Smell ல் நமக்கே வாசம் அடிக்கும் அளவிற்கு மலர்ந்து நிற்கும் பூக்கள், மரங்கள், தாவரங்கள்.
இப்படி ஒரு Visual அழகை மீண்டும் மீண்டும் பார்க்கவே படத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.


