படம் சொல்லும் பாடம் – 096
படம் சொல்லும் பாடம் : 96
” அப்படி எல்லாம் ஒருவன் பெரும் சர்வாதிகாரி ஆகிவிட முடியாது. அவனை வீழ்த்த அவன் சார்ந்த வட்டதிலேயே ஒருவன் கிளம்புவான் “



The Portrait will be unhung. The man will be hung.
இந்த முயற்சி தான் படம். படமென்றால் இப்படி இருக்க வேண்டும். நடித்தால் இப்படி நடிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஹிட்லரின் பாசிச உலகத்தில் அப்படியே வாழ்ந்த உணர்வு. ஒவ்வொரு அங்குலமாக இழைத்து உருவாகியிருக்க என்ன ஒரு Dedication இருந்திருக்க வேண்டும் ! Salutes to Tom Cruise. நடிப்பு என்ன என்றால் அந்த ஒற்றைக் கண் வழியே காட்டும் போது … நமக்கு Strautenberg வெற்றி பெற்று விட வேண்டுமே என்று மனம் துடிக்கிறது.
அரசியல் மட்டும் அல்ல. இராணுவத்திலும் அரசியல் உண்டு. அடுத்த நிலை மனிதர்கள் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது உண்டு. ஆனால் இந்த நிகழ்வு ஹிட்லரை கொன்று விட்டு யாரோ ஒருவரை ஹிட்லர் ஆக மாற்றுவது அல்ல. மாறாக .. ஜெர்மனி எப்படியும் தோற்கப் போகிறது என்பதை முன்னமே உணர்ந்த ஒரு குழு … மீதம் உள்ள நாட்டு மக்களையும் ஜெர்மனியையும் காப்பாற்ற முயற்சிக்கும் குழு. அப்படி காப்பாற்ற முயற்சிப்பது தான் நம்மை இந்தக் குழு எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்க வைக்கிறது. ஹிட்லரின் கூட்டத்தில் இருந்து ஹிட்லரை வீழ்த்த நினைக்கும் படம். உண்மை சம்பவம். ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரை நாம் நகர வாய்ப்பே இல்லை.



ஒவ்வொரு காட்சியின் நுட்பமும் வியப்பு. இசை அசத்துகிறது. நமக்குள்ளே ஒடும் உணர்வை காட்சியில் இசை பிரதிபலிக்கும் எனில் … அது தான் இசையின் உச்சம். அந்தக் காலத்து உடை, வாகனங்கள், பேச்சு வழக்கு, நிற்பது, நடப்பது, குறிப்பாக அந்த ஜெர்மன் துளைக்கும் கண்கள், பாவனைகள், hail hitler வசனங்கள் … அனைத்தும் அப்படியே நம்மை அங்கே வாழவைக்கிறது.
Tom என்னும் அற்புத நடிகரை இப்படி நடித்து மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. என்ன ஒரு கூர்மை அந்த ஒற்றைக் கண்ணில் ! முதல் காட்சியின் வீரம் கடைசி காட்சி வரை அப்படியே. ஆங்காங்கே நோக்கம் நோக்கிய நடையும், ஆங்காங்கே துடிப்பும், ஆங்காங்கே வெற்றி பெற்ற உணர்வும் .. Just WoW ! நடிப்பின் இராட்சதன்.
அந்தக் குழுவின் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட வாழ்திருக்கிறார்கள். இறக்கும் போது அவர்கள் சொல்லும் ” For Germany ” எது நாட்டுப்பற்று என்பதை யோசிக்க வைக்கிறது.
ஹிட்லர் என்னும் நிகழ்கால பூமியின் எமன்… என்ன ஒரு நடிப்பு ! அந்த நான்கு முடியை பின்னே தள்ளிக்கொண்டு பேசும் தேசப்பற்று, ஜெர்மனி வீரன் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று … பேசும் போலித் தேசப்பற்று…. ஒரே படம் இரண்டு தேசப்பற்றை பேசுகிறது. நமக்கு எது நிச்சயமாக சரி என்றும் படுகிறது.



சில படங்களை நாம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். எது தேசப்பற்று என்று நாம் புரிந்து கொள்ள மட்டும் அல்ல, எது போலியான தேசப்பற்று என்று நமக்கு சொல்லப்படுகிறது என்பதையும் !