படம் சொல்லும் பாடம் – 099
#படம்சொல்லும்பாடம் ; 099
” உயரங்களை அடைவது முக்கியம் அல்ல. உயரங்களை தக்க வைத்து அந்த உயரத்துக்கு தக்க தன்னை மாற்றிக்கொள்வதில் இருக்கிறது வாழ்க்கை ! “



நான் பார்த்ததில் மிக வியந்து – பார்த்த ஒரு Allrounder Hansie Cronje. South Africa மீண்டும் விளையாட வந்த போது – அந்த Team எப்படி இருக்கும் என்னும் ஆர்வம் எனக்குள் இருந்த போது … சந்தித்த இந்த Captain அந்த அணியை இன்னொரு தரமான அணியாக மாற்றி உலகுக்கு அறிமுகம் செய்தார். நமக்கு எதிராக விளையாடும் போது – மட்டும் கொஞ்சம் அவர் மேல் கோபம் வரும். ஆனால் இந்த Team Australia உடன் விளையாடும் போது – அதிகாலை விழித்து பார்த்த Cricket ரசிகர்களில் நானும் ஒருவன். அதிலும் குறிப்பாக 400 Runs அடித்த அந்த One Day ! The Best.
பொதுவாகவே நல்ல Batting, Bowling, Fielding, Captaining … இவை அனைத்தும் ஒரே அழகில் கிடைப்பது – மிக மிக அபூர்வம். அப்படியான ஒரு Cricketer வாழ்வில் Bookies எனபடும் இடைத்தரகர்கள் அந்த அபூர்வ திறமையை சந்திக்கிறார்கள். பணம் சபலத்தை ஏற்படுத்துகிறது. திறமையை வீழ்த்துகிறது. திறமையை சபலமாக மாற்றுகிறது. Hansie Cronje என்னும் அந்த அபூர்வ திறமை – கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னே வீழ்கிறது. அவர் அழும் ஒரு காட்சியில் நமக்கும் அழுகை வரும். ” தேவையா இது ? ” என்கிற ஒரு கேள்வி திறமைக்கு மிக அருகில் பயணித்து கொண்டே இருக்க வேண்டிய கேள்வி. அப்படியான ஒரு கேள்வியை கேட்கவில்லை எனில் …. திறமை அழிந்தே போகும்.
அந்த திறமை ஒரு விமான விபத்தில் இறந்து போவது … இயற்கையின் முடிவு. மொத்த குடும்பமும் அவரின் வீழ்ச்சியில் அவருடன் பயணிப்பது தான் Parenting கிற்கு அடிப்படை Lesson. அந்த மனைவி, அந்த அப்பா, அந்த தம்பி .. எல்லாம் அனைத்து குடும்பங்களிலும் இருக்க வேண்டியவர்கள்.



இதே வேலையை செய்த இந்திய Cricket வீரர்கள் இன்றும் சௌகரியமாக வாழ்கிறார்கள். அரசியலில் கோலோச்சுகிறார்கள். Mohammed Azarudeen ன் மனசாட்சி Hansi Cronje இறந்த அன்று நிச்சயம் பல கேள்விகளை அவருக்குள் எழுப்பி இருக்கும். அநேகமாக அன்று அவர் தூங்கி இருக்க வாய்ப்பில்லை.
இந்தியா என்னும் நாடும் இந்த திறமையை கீழே வீழ்த்தியதில் தன் பங்கை Bookies வழியாக செய்திருக்கிறது. எப்படி Bookies ஆல் இவ்வளவு எளிதாக அனைத்து players ஐயும் சந்திக்க முடிந்தது ? அப்போது Board ல் இருந்த இதற்கு பொறுப்பானவர்கள் யார் ? இங்கே கேள்விகள் தான் கேட்கும். பதில்கள் பதவிகளுக்கு பின்னால் மறைந்துகொள்ளும்.



Hansie Cronje ஆக நடித்தவர் கிட்டத்தட்ட அவரை கொண்டு வந்திருக்கிறார். பெரும் ஆச்சர்யம் அது. அவருக்கு வாழ்த்துக்கள்.


