படம் சொல்லும் பாடம் – 098
” தன் குறையை தானே ஒப்புக்கொள்ள மறுத்து, அதற்கான நிறையை எடுத்து பயணிப்பது தான் – வாழ்வின் தத்துவம் “



முதலில் www.bollant.com என்கிற Website ஐ பார்த்துவிட்டு இந்தப் படத்திற்கு வரலாம். ஒரு பார்வை அற்ற சிறுவன், அதை ஒத்துக்கொள்ள மறுத்து .. என்னால் முடியும் என்று நம்பும் ஆளுமையின் கதை.
அப்துல் கலாம் அவர்களை – மனதார மீண்டும் மீண்டும் பாராட்டவே தோன்றும் – இப்படி ஒரு மனிதர் அதிகார வட்டத்தின் மேல் மட்டத்திற்கு வரும் போது Srikanth Bolla க்கள் நிறையவே வரக்கூடும். Abdul Kalaam சொன்ன Bollant தான் நிறுவனத்தின் பெயரும் !!



ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் ? என்கிற கதாபாத்திரம் ஜோதிகா அவர்களுடையது. மாணவனை நன்கு கொண்டு வர நினைக்கும் அதே ஆசிரியர், மாணவருக்கு திமிர் சேரும் போது, ஏறும் போது அதை கண்களால் கேள்விகளால் சரி செய்து மீண்டுன் Sorry சொல்லும் மாணவனை வழக்கமான அதே முகத்துடன் ஏற்கும் ஆசிரியராக. நிறைய கற்றல்கள் ஒரு ஆசிரியருக்கு இதில்.
” அவர்களுக்கு போராடி மட்டுமே பழக்கம் “
என்று இன்னொரு பக்க நியாயத்தை சொல்லும்போது Just WoW.
உதவும் investor ஆக வரும் கதாபாத்திரம் சிறப்பு.



தான் விரும்பும் Cricketer Srikanth என்று பெயரிட்டு வளர்க்கும் மகனை, ஒரு Cricketer ஆகவே பார்க்க போகும் காட்சி சிறந்த ஒன்று. பார்வையற்றோர் cricket ல் விளையாட விரும்பும் அந்தக் காட்சிக்கு நாமும் காத்திருந்தாலும் அதை விட படிப்பு முக்கியம் என்று Boston செல்லும் யதார்த்தமும் நம்மை யோசிக்க வைக்கும்.
Rajkumar Rao என்னும் இந்த மகா நடிகனை கவனித்துக் கொண்டே வருகிறேன். நிறைய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை எடுத்து நடிப்பால் முன்னேறிக்கொண்டே வருகிறார். பெரும் எதிர்காலம் அவருக்கு இருக்கிறது.
தனக்கு பெயர் வரவில்லை என்னும் போது வரும் திமிர் – அதை வெளிப்படுத்தும் Non Verbal Behavior – Classic ! அதே போல Sorry கேட்கும் காட்சியும். நடிப்பின் இரு Ends. அவரால் மட்டுமே முடியும் என்று சில காட்சிகள். குறிப்பாக …
” நாங்கள் புத்தகங்களை வெளியிட்டு இருந்தால் ( Braille ) நீங்கள் படிக்க முடியுமா ? “
என்று கேட்கும் மனோபாவ முகம். Just WoW !
அந்தக் காதலி கதாபாத்திரமும் WoW. சரியாக இருக்கும்போது விரும்புவது போல, Ego ஏறிய காதலனை அவனின் குறை சொல்லி விலகுவதும் …. Class. மீண்டும் வருகிற காதலனை அப்படியே ஏற்றுக்கொள்வதும்.



Bollant Share Market க்கு வந்துவிட்டதா என்று தான் முதலில் கவனித்தேன். எதிர்காலத்தில் வரக்கூடும். வந்தால் நிச்சயம் Invest செய்யும் தகுதியோடு தான் இருக்கும்.
வாழ்த்துக்கள் Srikanth Bolla !