படம் சொல்லும் பாடம் – 100
” ஒவ்வொரு படத்திலும் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது – 100 ஆவது படத்திலும் “



100 படங்களை பார்த்திருப்பது பெரிய விடயம் அல்ல. அவற்றை பற்றி எழுதியது கூட பெரிய விடயம் அல்ல. அவற்றில் இருந்து கற்றதும் அவற்றினை தினசரி வாழ்வில் பயன்படுத்த முயற்சிப்பதும் தான் பெரும் விடயம்.
என்னுடைய Counselling கிற்காக வரும் ஆளுமைகளை சந்திக்கும் முன்பு அவர்களை பற்றி நான் நிறைய யோசிப்பது உண்டு. இந்த Counselling கிற்கு வரவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்யும் முன்பு அவர்கள் மனம் என்னென்ன கடினங்களை சந்தித்து இருக்கும், என்னை சந்திக்க காத்திருக்கும் நேரங்களில் மனம் எவ்வளவு வலித்து இருக்கும், தன் கடினப் பக்கங்களை மூன்றாம் மனிதரிடம் சொல்லும் முன்பு அவர்களுக்குள் எண்ணங்கள் எவ்வளவு துடித்திருக்கும் … அனைத்தும் அறிந்தே பேச … இல்லை .. கேட்க ஆரம்பிக்கிறேன். அந்த ” இன்னொரு பக்க வலி ” அனைத்தையும் Luccas World என்னும் இந்தப் படம் அழகாக சொல்லி விடுகிறது. நிச்சயம் ஒரு NLP Counsellor ஆக இந்தப் படம் எனக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறது !
கணவன் மனைவி பிறக்கும் புது குழந்தை – அந்தக் ககுழந்தைக்கான கடினமான உலகம், அது சார்ந்த முயற்சிகள், பயணங்கள், பிரச்சினைகள், புரிதல்கள், அரசியல், வியாபாரம், நம்பிக்கை, கோபம் … அனைத்தும் தான் படம்.
அந்த அம்மாவாக நடித்திருக்கும் பெண்மணிக்கு Oscar எல்லாம் வேண்டாம். Oscar award ஐ பெறுபவர்கள் முதலில் வந்து பார்க்க வேண்டிய படம் இது. இப்படி நடிக்க முடியுமா ? இப்படி ஒவ்வொரு நரம்பும், முக பாவனையும், உணர்வையும் … வெளிக்கொணர முடியுமா ? என்ன ஒரு யதார்த்தம் ! ஒவ்வொரு Parent ம் குறிப்பாக அம்மாக்களும் பார்க்கவேண்டிய படம் இது.
அந்தக் கணவர் … அவரின் ஒரு கால் … அந்த Brother .. பிறகு நம் Lucca … என்ன ஒரு உலகம் ! வேறு என்ன சொன்னாலும் படம் பார்க்கும் ஆர்வம் கெடலாம் என்பதால் ….
Bangalore தான் இந்த உலகப்படத்திற்கு தீர்வை சொல்லி இருக்கிறது. இந்தியா விற்கு அந்தக் குடும்பம் வரும்போது படம் பார்க்கும் நமக்கு ” அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமே ” என்று கவலை வருவது தான் இந்திய வாழ்வியலின் உச்சபட்ச மனிதம்.



படம் பார்த்து முடித்த போது எதையோ பெற்ற அனுபவம். எதையோ ” இன்னமும் நாம் செய்ய வேண்டியது ” இருக்கிறது போன்ற கேள்விகள், அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் …
வாழ்க்கை நமக்கு நல்லதாகவே கொடுக்கப்படுகிறது. நாம் தான் அதை உணர வேண்டி இருக்கிறது.
உணர்வோம். நாம் நன்றாகவே இருக்கிறோம். நம் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.



100 படங்களின் எம் பார்வையை என்னுடைய website ல் படிக்கலாம்.


