படம் சொல்லும் பாடம் – 101
#படமும்பாடமும் ; 101
” ஒரு படம் நமக்குள் உணர்வுகளை எழுப்ப வேண்டும். குறிப்பாக நாம் புதைத்து வைத்த / ஆழ் மனதில் Mute ல் வைத்த உணர்வுகளை – நீர்க்குமிழி போல எழுப்பி – படம் முடியும் போது – நன்றாகவே வாழ்கிறோம் என்கிற உணர்வை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் …. “



Piano வின் Genius.
வயதான, ஆனால் இன்னமும் மக்களை மேடையை பார்த்தால் Music ஐ சட்டென மறந்து போகும் பின்பு நினைவு வர – விரல்கள் விளையாடும் அந்த Music, அதை கொடுக்கும்போது அவரின் முகம், அந்த நடையில், நிற்பதில், உண்பதில், பார்ப்பதில் இருக்கும் நிதானம் …. நடிப்பு என்றெல்லாம் சொல்லவே வாய்ப்பில்லை. ( இந்தியாவில் கமலை தவிர இன்னொரு நடிகரை யோசித்து கூட பார்க்க முடியவில்லை. ! ) அப்படி ஒரு நடிப்பு. உணர்வு ஒவ்வொன்றுக்கும் ஒரு முக பாவனை. வயது ஆகும்போது ” சட்டென ” நினைவிழக்கும் அந்த ஒரு Micro Second நடிப்பு என்பதை நடிப்பு என்று சொல்ல முடியாத வாழ்வியல்.
படம் முழுக்க ஒற்றை வரிகள் விளையாடுகின்றன. தத்துவம் நிறைந்த வாழ்க்கையை கொண்டாடும், சகிக்கும், முன்னேற்றும் வரிகள். ஒன்றை கூட இங்கே எழுத விரும்பவில்லை. பார்த்தால் தான் அந்த உணர்வு புரியும். சரி .. ஒரே ஒரு வரி மட்டும் !
” Its strange how a Single Good memory can sometimes erase Years of Bad ones “
ஒரு ஆணுக்கு தன்னுடைய நிலை தடுமாறும் நாட்களில், வயதுகளில், எண்ணத்தில் துணை சேர்க்க ஒரு பெண் தேவைப்படுவாள். காலம் முழுக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கோ அல்லது சட்டென நிகழும் இறப்பு வரையோ அந்த துணை தேவைப்படும். அதிலுந் இங்கே அந்தப் பெண் … கண்களால் inch inch ஆக ரசிக்கும் அழகு இருக்கிறதே … ! Just WoW. அப்படியான ஒரு ஆண் piano வாசிக்க sofa வில் தூங்கும் ஒரு Blurred காட்சி ஒன்று போதும் !
ஆடை வடிவமைப்பு, நகரங்கள், தங்கும் அறை, பயண ஊர்தி, வீடு … என்று அனைத்தும் செதுக்கப்பட்ட வடிவமைப்பு. Camera ஒரு கவிதை போல கூடவே வருகிறது. Cinema ஒரு ஓவியம், Camera கொண்டு வரும் காட்சியால் கட்டப்பட்டு இருந்தால் !
Chess விளையாடும் அழகு. வெற்றி பெறப்போகிறோம் என்னும்போது அந்தக் குரல் சொல்லும் அதிகாரம், தோற்கப்போகிறோம் என்னும் போது உடையும் குரல், கீழே விழுந்து சிரிக்கும் அந்த இளகிய மனநிலை … இரவில் ஒரு நடை, மென் மழையில் நனையும் குதிரையை முகத்தில் வருடிக் கொடுத்தல் …. தூக்கம் இன்றி தவிக்கும் இரவு நேர ஆளுமைகளின் வாழ்வியலில் கலவை வருடல் காட்சிகள் இவை அனைத்தும்.



” The best thing about getting old is .. you are not worried about future anymore but you want the PRESENT TO LAST “
இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். நிறைய வாழ்வியல் அர்த்தங்கள் – முதல் அனுபவத்தில் புரிய முடியாத அளவிற்கு !


