படம் சொல்லும் பாடம் – 102
#படமும்பாடமும் ; 102
” கொஞ்சம் வாழ்க்கையின் சிறு வயது நோக்கங்களை கவனிப்போமா ? “



தாய் இருக்கிறார். சட்டென இறக்கிறார். சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துவிட்டு .. மகளுக்கு 10 DVD க்களை கொடுக்கிறார். அதில் அதே மகள் தன்னுடைய 13 ஆம் வயதில் ” வாழ்க்கையில் நிச்சயம் என்னென்ன செய்ய வேண்டும் ? ” என்று எழுதி வைத்திருந்த Bucket list ல் இருந்து தான் இந்த 10 DVD க்களும் வருகின்றன என்பது நமக்கே இனிப்பான ஆச்சர்யம். மேலும் நாமும் நம் சிறு வயதினை நினைக்க துவங்குகிறோம்.
ஒரு தாய் தன் மகளுக்கு கொடுக்கும் விலை மதிக்க முடியா சொத்து – அவளது இயல்பை நோக்கி அவளை பயணிக்க வைப்பது. அப்படி அவள் பயணிக்க பயணிக்க .. வாழ்வின் பெரும் இன்பங்கள் வேறு எங்கோ இருக்கின்றன என்று உணர வைப்பது. இதை விட ஒரு பெரும் Gift ஐ ஒரு தாய் அளிக்க முடியாது. அது தான் படம். இதே படத்தை Asia வின் அல்லது இந்தியாவின் Director எடுத்திருப்பின் …இன்னமும் கூட இது better ஆக வந்திருக்கும். Alia Bhatt மற்றும் Karan Johar என்னுடைய Choice ! தமிழில் கமல் அப்பா. மகனாக … சேரன். Director சேரன்.



படம் முழுக்க நிறைய கேள்விகள். நமக்குள். பதில்கள் தெரிந்தும் ” ஏன் செய்யாம விட்டுட்டோம் ? ” என்னும் தொடர் கேள்வி. சில ” அட ” List களும். படத்தை பற்றி நிறைய சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் … இங்கே Full Stop.
ஆனால் ஒன்றை சொல்ல வேண்டும்.
ஒரு Life Partner எப்படி இருக்க வேண்டும் ? என்னும் கேள்விக்கு 4 கேள்விகள் இருக்கின்றன. அந்த 4 கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தால் .. நம் Partner ஐ கண்டுபிடித்து விட்டோம் அல்லது அவருடன் அவளுடன் வாழ்கிறோம் என்று பொருள்.
அந்தக் கேள்விகளை இங்கே வைக்கிறேன்.
1. Is he / she Kind ?
2. Can you tell him / her everything in your heart ?
3. Does He / She help you to become the best version of yourself ?
4. Can you imagine a Family Together ?



பார்த்துவிட்டு உங்களின் எண்ணங்களை பகிரலாம். வேறென்ன கொண்டு செல்லப் போகிறோம் – எண்ணங்களை பகிர்வதை தவிர !


