படம் சொல்லும் பாடம் – 104
#படம்சொல்லும்பாடம் ; 104 JioHotstar
” ஆணின் திமிருக்கு எல்லையே இல்லை. அழிவு மட்டுமே ஆணுக்கு கடைசி அமைதியை தரும். ”
இப்போது பொள்ளாச்சியில் நடந்தது 1995 ல் ல்
ஆங்கிலப் படமாக ! அப்படி எனில் அதற்கு முன்பே அந்த சமூகத்தில் இருந்திருக்க வேண்டும். அப்படியே பொள்ளாச்சி சம்பவம். Video எடுக்கவில்லை. அவ்வளவு தான். கூட்டுப் பாலியல் வன்முறை – என்ன ஆகிறது அந்தப் பெண்ணுக்கு ? அந்தக் குடும்பத்துக்கு ?
அப்பா Lawyer / தாத்தா பெரிய மனிதர் / அம்மா நேர்மையானவள் / வீட்டில் ஒரு தங்கை … இந்தக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் அந்தக் கூட்டுப் பாலியலில் … ! என்னவெல்லாம் நடக்கிறது அந்தக் குடும்பத்தில் என்பது தான் கதை.
” சரியானதை செய்ய வேண்டுமா அல்லது சிறந்ததை செய்ய வேண்டுமா ? “ன்
என்று கேட்கும் அம்மா …
” நிகழ்கால Reality உனக்கு புரியவில்லை ” என்னும் அப்பா …
” நாம் நினைப்பது போல வாழ்க்கை அமையாது… ” என்னும் தாத்தா …
” என்ன நடக்கிறது இந்த வீட்டில் ? ” என்னும் தங்கை …
படம் முழுக்க வசனங்கள் நம்மை அறைந்து கொண்டே இருக்கின்றன.
Teen ஆணை பெண்ணை / திருமணத்திற்கு முந்தைய வயது குழந்தைகளை … வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம்.
” அவனுக்கு தன் தவறுகள் புரிவது இல்லை. தந்தை எப்படியும் அவனை காப்பாற்றுவார் என்பதால் ” என்னும் அம்மாவின் வார்த்தை பல அம்மாக்களின் கண்ணீர். பல தந்தைகளின் செருக்கு.
கூட்டுப் பாலியல் நடந்த பின் … அந்தப் பெண்ணை அப்படியே விட்டுவிட்டு வந்துவிட .. அவள் இறந்து போக …
கூட்டுப் பாலியல் செய்ததில் ஒருவன் தற்கொலை செய்து கொள்ள ….
இந்த விடயத்திற்கு மகன் பக்கம் நிற்கும் கணவனிடம் இருந்து பிரியும் மனைவி …
ஒரு கட்டத்தில் படத்தில் நமக்கு அப்பா மேல் கோபம் வரும். வந்தால் அது அந்த படத்தின் Character அப்பா மேல் வரும் கோபம் அல்ல. அது மகன்களிடம் பாசத்திற்கு மேலேயும் எதையோ வைத்திருக்கும் அப்பாக்களின் மூடத்தனமும், பண மற்றும் பதவி மற்றும் சமுதாயத் திமிரும் !
படத்தின் முடிவு நமக்கான Moral பக்கங்களை கேள்வி கேட்கும்.
தங்கைக்கு அண்ணனிடம் இருந்து வரும் Sorry க்கு பின்னே இருக்கும் உயிரோட்டம் தான் வாழ்வின் அச்சாரம்.
எதற்காக எதை இழக்கிறோம் ? என்னும் கேள்வி நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல நம் Teens களிடமும். ஒரு வேளை இந்தப் படத்தை அவர்கள் Values பக்கங்களை கையில் எடுத்துக்கொண்டு – அமைதியாக தனியாகப் பார்த்தால் !