படம் சொல்லும் பாடம் – 103
#படமும்பாடமும் : 103 JioHotstar
” இந்த உலகின் முதல் ஏமாற்றம் – உலகை ஏமாற்றுவது அல்ல. தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வது ”
இன்று நிறைய MLM பிரச்சினைகளை கவனிக்கிறோம். இதற்கெல்லாம் தந்தை என்று ஒருவர் இருக்கிறார் என்றால் …. அவர் தான் இந்தப் படத்தின் நாயகன் / வில்லன் / அனைத்துமே. முதலில் இந்த Character க்கான தேர்வு தான் அசத்தல். அதற்கு ” Robert Di Nero ” எப்படி ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் inch by inch அவரின் நடிப்பு – இப்படி தவறும் தவறு செய்யும் மனிதர்களை யோசிக்க வைக்கும். என்னை கேட்டால் … MLM நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் முதலில் பார்க்க வேண்டிய படம் இது. ” இதை எடுத்து அதில் போட்டு .. அதை எடுத்து இதில் போட்டு … ” கதை தான் இந்தக் கதை. Robert Di Nero வை மாற்றிவிட்டு யோசித்தால் இந்திய அளவில் கமல் மட்டுமே இதற்கு தகுதி பெற முடியும். அல்லது … 10 வருடத்திற்கு முந்தைய அமிதாப் – இன்றைய நடிப்பு முதிர்ச்சியுடன் ! அப்படி ஒரு ஆழம் நடிப்பில். அதிலும் .. மனைவியிடம் பேச முயற்சிக்கும் போதெல்லாம் அவர் line ல் இல்லை என்றவுடன் அந்த சுவற்றை / phone ஐ பார்த்துக்கொண்டு மௌனமாக நிற்கிறாரே – நடிப்பின் Master Class !!
ஆனால் … படம் எப்படி ஏமாற்றினார்கள் என்பதை பற்றி அவ்வளவாக பேசவில்லை. அது தான் இந்தப் படத்தின் அழகே. அதற்கு பதில் இந்தப் படம் – ஒரு தவறுக்கு பின் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை – மனைவி, மகன், மருமகள், பேரன் – அவர்களின் வாழ்க்கையின் மாறுதல்கள் … மனதை கசக்குகின்றன. ” இப்படி இந்தப் பணம் தேவையா ? ” என்னும் எண்ணத்தை படம் ஏற்படுத்துவது தான் இந்தப் படத்தின் பெரும் வெற்றி.
மனைவிக்கு தான் முதல் அதிர்ச்சி. ” நீ என்னிடம் இதை அனைத்தையும் சொல்லி இருந்தாலும் உன்னுடன் இருந்திருப்பேன் ” என்னும் போது …Madoff உடைந்து போகிறார். ஒரு மனைவிக்கு கிடைக்கும் அவ மரியாதை – பணத்தை ஏமாற்ற நினைக்கும் அனைத்து கணவர்களும் – மனைவியுடன் அமர்ந்து இந்தப் படத்தை பார்த்தால் நிச்சயம் அடுத்த action தடைப்படும். “இப்படி இந்தப் பணம் தேவையா ? ” கேள்வி முன்னே வந்து குடும்பத்தை காப்பாற்றும்.
மகன் தற்கொலை செய்து கொள்வது வலித்தது. ஆனால் தன் சிறு குழந்தையை தொட்டிலில் இருந்து இறங்கி விடாமல் இருக்க கயிற்றால் கட்டிவிட்டு – தூக்கிட்டு – மாமனார் வந்து பேரனை காப்பாற்றி கொண்டு செல்லும் போது கயிற்றில் தொங்கும் அப்பாவை பார்த்துவிடக்கூடாது என்று கண்ணை மறைக்கும் இடம் உள்ளே அத்தனையும் அதிர்ந்து போகிறது. மீண்டும் அதே கேள்வி தான் ” இப்படி இந்தப் பணம் தேவையா ? ”
தினமும் பத்திரிக்கைகளில் தன்னைப் பற்றி என்ன வருகிறது என்று பார்த்து – அறைக்குள் அடங்கி – நட்புக்களிடம் இருந்து விடுபட்டு – தனக்கு தானே பேசி … என்ன வாழ்க்கை இது ! பணம் வாழ்க்கையின் அழகிற்கு உதவ வேண்டும். அழிவுக்கு அல்ல.
பொதுவாக பணத்தைப் பற்றி நாம் Extremes களில் தான் யோசிக்கிறோம்.
1. அதுவே அனைத்துக்குமான தீர்வு.
2. அது இல்லாமலும் இருப்பதை கொண்டு வாழலாம்.
இரண்டும் தவறு.
திறமை – பொருளாதரமாக மாற வேண்டும்.
ஆனால் பணமே வாழ்க்கையின் அனைத்து பக்கங்களும் அல்ல என்னும் தத்துவ புரிதலும், என்ன கொண்டு செல்ல போகிறோம் என்னும் எண்ணமும் … வளர வளர வளர்ந்து கொண்டே வரவில்லை எனில்..
நீங்களும் வேறு ஆடை உடுத்திய, வேறு கலாச்சாரத்தில் வாழ்கின்ற, வேறு நாட்டில் இருக்கிற … இன்னொரு Madof தான் !