படம் சொல்லும் பாடம் – 106
#படம்சொல்லும்பாடம் : 106 Netflix
#Manhunt ; The inside Story of The Hunt for Bin Laden



ஒரு documentary என்றால் எப்படி இருக்க வேண்டும் – என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல வைக்கும் Document தான் இது. Osama Bin Laden – எங்கே ஆரம்பித்தது முதல் எங்கே வெடித்ததில் இருந்து முடிவு வரை … இந்த உலகின் அனைத்து Thrillers ம் தோற்றதற்கு சமம்.
இந்த Documentary யை பார்ப்பதற்கு முன் …
சில பார்வைகள் ;
1. போர் தீர்வே அல்ல
2. ஒரு பழி வாங்குதலுக்கு இன்னொரு பழி வாங்குதல் காத்திருப்பில் இருக்கிறது என்று அர்த்தம்.
3. பழி வாங்குதலில் இரண்டு பக்கமும் நியாயம் உண்டு. ஒரு பக்க நியாயம் மட்டும் வெளிவருதல் நிச்சயம் அரசியல் / பதவி / பணம் / மற்றும் Status Symbol !!
4. US ன் நியாயம் சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதே நேரம் … பின் லேடன் ஏன் இதை செய்ய வேண்டும் ? என்னும் கேள்வி இலாவகமாக மறக்கப்பட்டிருக்கிறது. அல்லது மறைக்கப்பட்டு இருக்கிறது.



அதெல்லாம் இருக்கட்டும். ஒரு அரசாங்கம் தன்னை பற்றி உண்மையாக / அதாவது செய்திருக்க வேண்டியவைகளை செய்யாமல் விட்டது / உதவிய Departmemts உதவாத Departmemts / அரசியல் முடிவுகள் / முடிவு எடுத்த விதம் / எடுக்க முடியாமல் தடுமாறியது / மக்களிடம் அசிங்கப்பட்டது … அனைத்தையும் இப்படி ஒப்புக்கொள்ள முடியுமா ? Hats off to America ! Such a Powerful Documentary.
இந்தியா போன்ற நாடுகளில் இப்படி ஒரு Documentray – வாய்ப்பே இல்லை ! இங்கே லர்ஜ்ர்than Life Hero Heroine யை தான் உருவாக்க முயற்சிப்பார்கள்.



ஆங்காங்கே மனம் பதைக்கிறது.
எந்தப் பக்கத்தில் இருந்து நியாயம் சொன்னால் என்ன ? இருப்பது மனிதர்கள் தானே ? குடும்பங்கள் தானே ? தலைமுறைகள் அழிக்கப்படுவது தான் பெரும் பாவம்.
பார்த்து முடித்த பின் மனம் இன்னமும் நிலைக்கு வர மறுக்கிறது.
எங்கோ என்னவோ தவறு இருக்கிறது. இந்த Documentray முடிவல்ல. இதற்கு தொடர்ச்சி யாக Part 02 வாக யாரோ எங்கோ எழுவார்கள். மீண்டும் எதிர்தரப்பு அதை அடக்கும். இராமாயணம் மஹாபாரதம் எல்லாம் தீயவற்றை முடித்துவிட்டதா என்ன ? தீமை வெல்லும், ஆனாலும் தர்மம் மீண்டும் மீண்டும் வெல்லும் – என்னும் concept யாருக்கோ எங்கோ தங்கள் தரப்பு தர்மத்தை சொல்ல உதவிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு Frame ஆக இந்த Documentary பற்றி எழுதலாம். ஆனாலும் என்னவோ ஒன்று எழுத தடுக்கிறது. இறப்பை வன்முறையை கொண்டாடுவது நல்ல மனநிலை அல்ல. அதிலிருந்து கற்க வேண்டியது தான் நல்ல மனநிலை.



ஒரே ஒரு புரிதல் தான் இந்த Documentary பார்த்தவுடன் ….
முடிந்தவரை நல்லதை செய்வோம். நன்கு வாழ வைப்போம். அதன் மூலம் நன்கு வாழ்வோம்.


