படம் சொல்லும் பாடம் – 105
#படம்சொல்லும்பாடம் : 105



” தொடுதல் என்பது ஒரு உணர்வுக் கடத்தி. “



தனி மனிதன் ஒரு சிறுவனை Adopt செய்ய முற்படுவதும் – அதன் ஊடாக நடக்கும் சம்பவங்களும் தான் கதை.
காட்சிக்கு காட்சி கவிதை. குழந்தைகளை புரிந்து கொள்ள … நாம் அவர்களை அல்ல .. அவர்களின் செயல்களை கவனிக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து … ஒவ்வொரு வரியும் கவிதை. ஆங்காங்கே வரும் Guitar ன் அல்லது Piano ன் இசை மனதை என்னவோ செய்து கொண்டே இருக்கிறது.
ஒரு படம் காட்சிக்கு காட்சி நமக்குள் கேள்விகளை எழுப்பும் எனில் அநேகமாக அது இந்தப் படமாக இருக்கக்கூடும். Counsellors / Parents / Adopted Parenting People / Want to Adopt / Trainers … அனைவரும் பார்க்க வேண்டிய படம். Single ஆக வாழ்வோரும் !
படம் முழுக்க யாரோ யாரையோ … குறிப்பாக யாரோ ஒருவரின் தொடுதலையோ … தழுவலையோ … care நிறை முத்தத்தையோ எதிர்பார்க்கிறார்கள். மனித மனத்தின் பெரும் மருந்து பக்கத்தில் இருக்கும் இன்னொரு மனதின் ஆறுதல். அதிலும் குறிப்பாக கடின காலக்கட்டத்தில் !
Adopt செய்ய நினைக்கும் Character ன் அப்பா …. Adopt செய்யும் சிறுவனின் அப்பா …. என்ன ஒரு Contrasting Lifestyles ! ஆனாலும் .. அப்பாக்கள் அப்பாக்களே !!



ஒரு முகத்தை வரைந்து … குறுக்கே கோடுகளை வரையும் காட்சி சொல்லும் ஜெயிலில் இருக்கும் அப்பா …
அம்மா அப்பா புகைப்படத்தில் அம்மாவை கிழித்து எறிந்து விட்டு …. அப்பாவை மட்டும் பத்திரப்படுத்தும் காட்சி ..
Jimmy ன் அப்பா நான் என்று கிட்டத்தட்ட அடையாளமே தெரியாமல் வரும் காட்சி ….
நாம் செய்யும் சில தவறுகளால் மகனை பார்க்க முடியாமல் / பார்க்க விரும்பாமல் போகும் என விவாதிக்கும் காட்சி.. மகன் அப்பாவிடம் பேச முடியாமல் அழும் காட்சி …
அனைத்தும் பாடங்கள்.



கடைசிக் காட்சி -I want to be the Second Best …. தான் சிறப்பான கவிதை.
அந்தக் கால படம். அவசரம் இல்லை. பெரும் திருப்பங்கள் இல்லை.
ஆட்டம் பாட்டம் Punch Dialogue எல்லாம் இல்லை
Characters உடன் நாமும் வாழ்கிறோம். சிரிக்கிறோம். அழுகிறோம்.
அதுதான் படம்.