Frozen Learning : 004
” To be at Best, Just Be. “



” இந்த வயதில இதுக்கு மேல என்ன ? ” என்ற இந்த வரி காதில் விழுந்து கொண்டே இருப்பதை கவனிக்கிறேன். இந்த வரியை கேட்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். வயதுக்கும் / நினைத்தபடி வாழ்வதற்கும் … என்ன சம்பந்தம் ?
” Some Questions are to be reflected upon .. in Little depth “



வயது சேரும்போது வாழ்க்கை பல மனிதர்களை அனுபவங்களை பக்குவங்களை கொண்டு வருகிறது. அதற்கு பின் புறம் அழிந்து அகம் மிளிர்கிறது. உண்மையாய் சொல்ல வேண்டும் எனில் புறம் அழிந்து அகம் மிளிரும் வேளை தான் மிக சரியான வேளை .. நினைத்தபடி வாழ ! ஆனால் சமுதாய நிர்ப்பந்தங்களில் சிக்கிக்கொண்டு .. ” இனிமே நமக்கென்ன ” என்ற வரியை தண்டனையாக ஏற்றுக்கொண்டு .. எங்கும் எதிலும் கலக்காமல் அப்படி ஒரு வாழ்க்கையை நான்கு சுவற்றுக்குள், ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் வாழ வேண்டுமா என்ன ?
” The Worst limit is the Limit we Put for Ourselves “



பிறப்பும் இறப்பும் தவிர மீதம் அனைத்தும் இந்த உலகில் மறக்கப்படும். மறக்கடிக்கப்படும். இப்படி ஒருவர் இங்கே வாழ்ந்தார் என்பதே ஒரு கட்டத்தில் ஞாபகப்படுத்தப்பட வேண்டி இருக்கும். அப்படியான வாழ்க்கையில் .. ” சர்தான் போ ” என்று வாழ்வதும் வாழ்க்கை தான். ” என்னத்த கண்டேன் ” என்று சொல்வதை விட ..” நினைத்தபடி வாழ்ந்தேன் ” என்பது வாழ்வின் பெரு நிலை.
” The Best has to be for Self. Not for others. “



VVijaya
அம்மாவின் வாழ்க்கை அப்படி அமையட்டும்.
Priyanalli Raghavan
அவர்களுக்கு அப்படி ஒரு வாழ்வை கொடுக்கட்டும். இந்த Yercaud பயணத்தின் புகைப்படம் … இன்னொரு பக்கத்தை தான் விரும்பிய எழுத்துக்களால் நிரப்பிக்கொள்ளட்டும்.
படித்துக்கொண்டிருக்கும் உங்களில் நம்மில் யாருக்கோவும் இது பொருந்தக்கூடும். நினைத்தபடி வாழ்ந்து விடுவோம்- மற்றவர்கள் நினைத்த படி அல்ல – நாம் நினைக்கும் படி !
” Not only the Body, The Life is also .. Exclusively Yours. ! “


