Frozen Learning : 006



” இந்த கடையில் ஒரு பெண் இருக்கிறார்கள். அவர்கள் தான் இங்கே mechanic “
” மாமா .. Lady mechanic ஆ ? “
” ஆமாம்மா. அவங்க தான் இந்த கடை நிர்வாகமே. அவங்க பேர் tv யில, paper ல லாம் வந்திருக்கு “
” அப்பா .. எப்படி மாமா ? “
” lady யால் முடியாதுன்னு யார்மா சொன்னா ? எல்லோராலயும் முடியும் “
” Introduce Excellence. Be an Excellence. Then .. Expect people to be Excellent “



” ஒரு போலீஸ்கார அப்பா. அவரோட பொண்ணு நல்லா படிச்சு, Exam ல நல்ல mark Score பண்ணி … அதே Police Department ல .. பெரிய அதிகாரி யா ஆயிடறாங்க “
” அப்படியா ? “
” ஆமா. ஒரு நாள் அவங்க அப்பா பொண்ணுக்கு salute அடிக்கிற மாதிரி situation வருது. அப்பா வும் salute அடிக்கிறார். ஆனால் சந்தோஷமா ! “
” ஏன் சந்தோஷமா ? “
” பின்னே .. மகள் மகன் நம்மை விட பெரிசா வளரத பார்த்தா அப்பா அம்மாவுக்கு சந்தோஷம் தானே வரும் ? “
” ம் “
” Share Benchmarks. What You Share makes Them “
கொஞ்ச நேர அமைதி.



ஆயிரம் விடயங்கள் உலகில் நடக்கும். எதை சொல்ல வேண்டும் என்பதும் இந்த உலகில் தான் இருக்கிறது. மனிதர்களில் அனைத்து விதங்களும் உண்டு. நம்பிக்கை மனிதர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த அறிமுகப்படுத்த .. அவர்களுக்கு .. உலகம் மேல் நம்பிக்கை வளரும். அந்த Standard இல்லாதவர்களை அழகாக ஒதுக்கி விட்டு .. சரியான ஆளுமைகளுடன் முன்னேறுவார்கள்.



” கோவிலுக்கு எதுக்கு வர்றோம் ? “
” நல்லது நடக்க மாமா ” அவன் சொன்னான்.
” கோவிலுக்கு வரலை ன்னாலும் நல்லது தானே நடக்கும் “
” இல்லை மாமா. அவருக்கு சொல்லணும். சொன்னால் பார்த்துக்குவார் “
மூன்று பேரும் சிரித்தோம்.
சரி தவறு எல்லாம் கடந்து அந்த நம்பிக்கையை அழகாக மீண்டும் மீண்டும் விதைப்பதில் இருக்கிறது வளர்ப்பு.
” Trust is invisible. But the Impacts it creates ? .. Very Visible ! “


