Frozen Learning : 008



#5pmfamily – சிவகங்கை சந்திப்பு நேற்று. கற்றலின் நோக்கில் தெளிவாக இருக்கும் ஆளுமைகள் கலந்து கொண்ட நிகழ்வு அது. வந்திருந்த அனைவரும் தன்னை அறிமுகம் செய்துகொள்ள … புரிதல்கள் சிரிப்புகளாகவும், மகிழ்வாகவும் சங்கமித்த நேரம் அது.
Fb யில் live ல் sessions ஐ பார்த்திருந்த ஆளுமைகளுக்கு .. நேற்று நேரில் பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கக்கூடும். ” மிக்க நன்றி சார். உள்ளே பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது இந்த நிகழ்வு. இந்தப் பக்கம் எங்கே உங்களின் நிகழ்வு நடந்தாலும் வந்துவிடுவேன் ” என்று சொன்ன – இராமநாதபுர ஆளுமையின் குரல் இன்னமும் காதில். மனிதர்களை நேரில் பார்த்து sessions செய்வது மிக முக்கியமான ஒன்று. அதில் எனக்கு பெரும் மகிழ்வு.
வாழ்க்கையில் நாம் கவனிக்க வேண்டிய நான்கு விதமான பார்வைகளை நேற்று முன்னே வைத்திருந்தேன். அது சில மாறுதல்களை settings ல் ஏற்படுத்தி இருக்க கூடும். ” சம்பாதிக்கிறோம். Loan வாங்குகிறோம். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்து கனவுகளை வைத்திருக்கிறோம். அனைத்திற்கும் மிக முக்கிய காரணியாக இருக்கும் உடலை எப்போது கவனித்தோம் ? உடல் – சரியாகவே இருக்கிறது என்பதை அனுமானித்து வாழ்கிறோமா அல்லது உறுதியாக எண்களால் பார்த்து வாழ்கிறோமா ? ” போன்ற பார்வைகள் settings ஐ கொஞ்சம் அசைத்திருக்ககூடும்.
கடைசியாக பேசிய
Yuva Bharathi
தான் பெரும் Attraction. அந்த குழந்தை பேசிய தமிழை
Kavitha Suresh
அருகில் இருந்து கேட்டிருக்க வேண்டும். அவ்வளவு அழகு ! குழந்தைகள் தமிழ் பேசப் பேச .. நாம் முழுத் தமிழில் பேசுகிறோமா என்கிற கேள்வி உள்ளே எழுகிறது. எழவேண்டும். குழந்தைகள் பேசும் அழகுத் தமிழ் நம் தமிழை நமக்கு அளவீடு செய்ய பயன்படும் காரணி !
முன்னிருந்து இந்த நிகழ்வை நடத்திய ஆளுமைகளுக்கு என் நன்றி.
பயணிப்போம். நிதானமாக. நேர்மையாக.


