Frozen Learning : 010
” When there is a Talent, Support it to Blossom. “.
பல வீடுகளுக்கு சென்று இருக்கிறேன். பல குழந்தைகளிடம் விளையாடி இருக்கிறேன். பெரும்பாலான குழந்தைகள் Mobile ல் settle ஆகிவிடும். அல்லது விளையாடும். அல்லது விளையாட அழைக்கும். ஒரு சில குழந்தைகள் வீட்டை சுற்றிக் காண்பிக்கும். ஆனால் நேற்று … ?
” ஒரு Game விளையாடலாமா uncle ? “
” சரிம்மா “
கை விரலை பிடித்து கூட்டி கொண்டு சென்று …
” இந்த 05 Posters இல் எது பிடிக்கிறது ? “
என்று கேட்டவுடன் ஒரு Poster ஐ சொன்னேன். அதில் Room என்று எழுதி இருக்க …room க்கு என்னை அழைத்து சென்ற பின் …
” இங்கே ஒரு Blue Colour Hair Clip இருக்கு …கண்டுபிடிங்க “
என்று சொன்னவுடன் தான் ஆட்டம் புரிந்தது. ” அட ” என்றும் தோன்றியது. தேட ஆரம்பித்தால் பிடிபடவில்லை.
” Sudden Exposure to Situation is the Mother of all Innovation “
” தெரியலை ன்னா clue குடுங்க ன்னு கேட்கணும் “
தேடிவிட்டு ” clue ” என்று கேட்டேன். Clue சொல்லியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி 05 முறை. ஒன்று தான் கண்டுபிடிக்க முடிந்தது.
” நீங்க கண்டுபிடிச்சத்துக்கு இது பரிசு ” என்று paint ல் செய்த watch ஒன்றை கையில் கட்டிவிட்டு யாழினி சிரித்த போது …
மற்ற குழந்தைகளிடம் இருந்து யாழினி விதியாசப்படுவதை கவனிக்க முடிந்தது.
Praba Karan
Sumathi Prabakaran
இருவரும் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தைகள் TV யில் கவனம் செலுத்தவில்லை. Mobile இல் கவனம் செலுத்தவில்லை. மாறாக …. Creative thinking ல் கவனம் செலுத்துகிறார்கள்.
” வழக்கமான Doctor Engineer க்குன்னு படிக்க வச்சிடாதீங்க ” என்று சிரித்து சொன்னேன்.
அப்படி படிப்பதில் தவறு இல்லை. ( ஆனால் அங்கும் Creative ஆக இருக்கும் ஆளுமையாக வர வேண்டும் ).
Car ல் அமரும்போது யாழினி சொன்னது …
” எனக்கு Seat belt போடணும் “
எனக்குள் சிரித்து கொண்டேன். சரியாகத்தான் குழந்தைகள் வளர்கிறார்கள் – சமூகத்தின் தேவை அற்ற பகுதிகள் / சூழ்நிலைகள் / மனிதர்கள் அவர்களை கவனிக்காதவரை !
வீட்டுக்கு வந்த பின்பும் அந்த Game கண்ணுக்குள்ளேயே இருந்தது. ” சட்டென ” நான் அவர்கள் வீட்டிற்கு சென்று இருந்தேன். அப்படி எனில் .. நான் சென்ற பின்பு தான் அப்படி விளையாட யோசித்திருக்க வேண்டும். யோசித்ததை செயல்படுத்தி, என்னிடம் சொல்லி, Game ஐ எனக்கு புரியவைத்து, விளையாடி, பரிசு கொடுத்து .. என்ன மாதிரியான ஒரு ஆளுமை !
குழந்தைகளிடம் நாம் நிறைய கற்க வேண்டி இருக்கிறது – அவர்களுக்கு கற்று கொடுப்பதை நிறுத்திவிட்டு !
” Stop Telling. Start Learning. Importantly .. Apply Practicing ! “






