நான் எனப்படும் நான் : 111
” An Understanding Smile is worth of a Life “



ஏன் பயணங்களில் மட்டும் நமக்கு புன்னகை அப்படி வருகிறது ?
இருக்கும் இடம் இல்லை என்று ஆன பின்பு, நகரும் இடம் .. இருக்கும் இடம் என்று ஆவது பயணங்களில் மட்டுமே ! நகரும் இடம், நகரும் மனிதர்கள், புதிய பார்வை, புதிய கற்றல், புதிய அசௌகரியம் … என்று அனைத்தும் மாறும் கணத்தில் வரும் புன்னகை தான் … பயணத்தின் காதலி !
” Travel and Laughter are Best Couple. One never want to miss the Other one ! “



அடிப்படையில் நான் ஒரு Traveller ! நகர்தலும் கற்றலும் மாறுதலும் யதார்த்தமும் என் உடன்பிறப்புகள். கடந்த முறை என்னை பார்த்தவர்கள் மீண்டும் பார்ப்பதற்குள் நான் மாறும் வேகம் மிக அதிகம். அவ்வளவும் கற்றலில் ! Values அப்படியே இருந்தாலும் .. பார்வைகள் மாறும். மாற வேண்டும். அப்படியே இருக்க மனிதர்கள் ஒன்றும் கருங்கல் அல்ல. இரத்தமும் சதையுமாக … தினசரி பாடங்களை படிப்பவர்கள். பயணங்களில் இந்த படிப்பு அதிகம். படிப்பு எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவுக்கு புன்னகை முகத்தில் வந்திருக்கும். வரவேண்டும். இல்லை எனில் மனிதர்கள் நடிக்கிறார்கள் என்று அர்த்தம்.
” Learning is all about Removing Masks, Not about Wearing them Cleverly ! “



மின்னல் ஒன்று
வெட்டிக்கொண்டே இருந்தது ..
அந்த பயணிக்கு
வெளிச்சம் கொடுக்க !
எங்கோ எப்போதோ எழுதிய கவிதை ஒன்று.. Just பகிர்கிறேன்.
வெளிச்சம் கொடுக்க ஏதோ ஒரு மின்னல் எங்கோ வெட்டிக்கொண்டே தான் இருக்கிறது ! பயணிப்போம் – வெட்டும் மின்னல்களை முழுமையாக நம்பி, புன்னகைத்து, மகிழ்ந்து … !
” Darkness is the Real House for a Traveller. He or She Just eats Darkness with an attitude – Called Exploring ! “


