நான் எனப்படும் நான் : 112
” When You Merge with Your Passion, Nothing else Matters Most “



Kumar Thinker
– க்கு நன்றி. சில புகைப்படங்கள் மனதுக்கு நெருக்கமானவை. அதில் இதுவும் ஒன்று ! சிவகங்கை தீரா உலாவிற்காக என்று இடங்களை தேர்வு செய்ய பயணித்து கொண்டு இருந்தபோது .. அரிட்டாப்பட்டி சிவன் ஆலயம் நோக்கி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இங்கே வந்ததும் சட்டென மனதில் தோன்றிய முடிவு தான் #தீராஉலா2021Feb – Sivanganai Edition.
பொதுவாக என்னுடன் பயணிக்கும் பலவற்றில் Camera முக்கியமான ஒன்று. இந்தியா முழுக்க அது பயணித்து இருக்கிறது. பல முகங்களை படம் எடுத்து இருக்கிறது. பல மாநிலங்களின் காட்சிகளை அது விழுங்கி எனக்குள் பிரசவித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் Camera அதுவே ! ஆனால் காட்சிகள் வேறு. காட்சிகள் கொடுக்கும் மகிழ் மன நிலை வேறு.
Kargil ல் இந்திய இராணுவ வீரர்கள் இறந்த உடல்கள் புதைக்கப்பட்ட நினைவிடத்தில் நின்று மரியாதை செலுத்தும்போது … கொஞ்சம் emotional ஆக ஆனதில் … அடுத்த step எடுத்து வைக்கும்போது படிக்கட்டினை கவனிக்காததால் … கீழே நான் விழுந்த போது .. Camera முதலில் விழுந்து பின் நான் விழுந்தது இன்னமும் ஞாபகத்தில் ! அந்த வடு Camera வில் இன்னமும் இருக்கிறது. ஆம். Camera க்களுக்கும் சொல்ல முடியா காயங்கள் உண்டு !
கையில் என் Camera வை வைத்துக்கொண்டு நான் நடக்கும்போது ” இந்த உலகம் முழுக்க நகரும் காட்சிகளாகவே ” எனக்கு தெரியும். Camera வை வைத்திருக்கும், உபயோகிக்கும், சுவாசிக்கும் மனிதர்களுக்கு தெரியும் … நான் சொல்ல வருவது ! கிட்டத்தட்ட எனக்கு குழந்தை போலவே தான் என் Camera. பயணங்களில் அமர்ந்திருக்கும் வேளைகளில் பெரும்பாலும் என் மடியில் தான் இருக்கும். கீழே வைக்க மனம் இடம் கொடுக்காது. கீழே வைத்தாலும் சரியான இடம் பார்த்து வைக்கவே மனம் விரும்பும். சில வேளைகளில் அதற்கென வாங்கி இருக்கும் Shawl ல் சுற்றியும் வைப்பது உண்டு. ஆம். திறமைக்கு உதவும் அனைத்தும் திறமையாளர்களின் குழந்தைகள் தான் !
இந்த Camera எடுத்த பல புகைப்படங்களில் .. பல புகைப்படங்கள் … . அவை இன்னமும் என் மனதை ஏதோ செய்து கொண்டே இருக்கிறது. காலம் வரும்போது அவற்றை ஒவ்வொன்றாக இங்கே பகிர்கிறேன். விரைவில் !


