நான் எனப்படும் நான் : 118
” ஊஞ்சல்கள் வாழ்க்கையின் பெண்டுலங்கள். இடது வலதுக்கு பதில் முன்னும் பின்னும் மட்டுமே மாற்றம் !.”



ஊஞ்சலில் அமர வைத்து அப்பாவோ அம்மாவோ என்னை முன்னும் பின்னும் ஆட்டியதில்லை. அப்போதைய சூழ்நிலைகளில் இதற்கெல்லாம் நேரமோ ஆசையோ இல்லை. ஆனால் அதற்கு பிந்தையை காலங்களில் ஊஞ்சலை கடந்து செல்லும்போதெல்லாம் …. இதில் நாம் ஏறவில்லை என்று மனதுக்குள் ஒரு எண்ணம் உதித்துக்கொண்டே இருக்கும்.
அகமதாபாத்தில் ஒரு பூங்காவில், குளிர் காலையில் ….. யாருமற்ற ஊஞ்சலை கண்ட போது .. முதன் முதலாக அமர்ந்து முன்னும் பின்னும் என்னையே நான் இயக்கிய போது தான் தெரிந்தது … எவ்வளவு அழகான விதயம் இது என்பது ! பின்பு Fort Cochin ல். பின் மும்பையில். பின் குவஹாத்தியில். இமயமலையில் யாதும் யாரும் இல்லாத ஒரு மரத்தில் கட்டப்பட்ட தனி ஊஞ்சலில் … என்று பயணங்களில் இதுவும் ஒரு பகுதியானது !
தங்கை குழந்தைகள் … வந்த பின்பு எனக்கு கிடைக்காததை அவர்களை அமர வைத்து … முன்னும் பின்னுமாக இயக்கி அவர்கள் சிரித்த போது அப்படி ஓர் ஆனந்தம் ! தனக்கு கிடைக்காததை தன் குழந்தைக்கு கொடுக்க தான் ஒவ்வொரு தந்தையும் தாயும் முயல்கிறாள் / முயல்கிறார். அதை புரிந்த குழந்தைகள் தாய் தந்தையின் செல்ல பிள்ளைகள் !
ஊஞ்சலில் ஆடும்போது உங்களுக்கு என்ன தோன்றும் ? எனக்கு …



உங்களுக்கு ?


