நான் எனப்படும் நான் : 124
” Every Human Waits for A Change. If You Bring it He or She will be Thankful to You “
Car ஐ நிறுத்த சொல்லி கை காட்டல். நிறுத்திவிட்டு வெளியே வந்தேன். சில நொடிகள் காத்திருப்பு. என்னை நோக்கி வந்த Team மிடம் ….
” Check பண்ணிட்டு சீக்கிரம் அனுப்பிச்சீங்கனா கிளம்புவேன் “
என்று சிரித்துக்கொண்டே சொல்ல …
வந்த அந்த காவல் துறை மற்றும் மற்றவர்கள் ( ஒரு பெண்மணி ) அனைவரும் சிரித்தனர்.
Checking நடந்தது.
” இது என்ன ? “
” முழுக்க புத்தகங்கள் “
” அது ? “
” முழுக்க முழுக்க புத்தகங்கள் “
முதன்முதலாக முகத்தை பார்த்தார். ( யார்ரா இவன் …. பணம் வச்சுறுப்பான்னு பார்த்தா ? !! என்று சொல்லியது அந்த பார்வை 

)
” சார் என்ன செய்கிறீர்கள் ? “
சொன்னேன்.
” நிறைய படிப்பீங்களோ ? “
சொன்னேன்.
” சார் இங்க வாங்க. இந்த Box ஐ திறங்க “
ஒரு நொடி நிதானித்தேன்.
அந்த பெண்மணி முகம் மாறியது.
சிரித்துக்கொண்டே திறந்தேன்.
” என்னது இது ? “
” பாதாமும் seeds ம் “
” எதுக்கு சார் இது ? “
” Breakfast க்கு “
என்னை அந்த பெண்மணியும் முதன்முதலாக ஏறெடுத்து பார்த்தார்.
” எதனால் இது சாப்பிடறீங்க ? “
சொன்னேன். Diet / Carb / Protein /No Sugar …. என்று அனைத்தும் பேச்சில் வந்தது.
” அப்போ அரிசி சர்க்கரை கேடா ? “
சிரித்தேன்.
” சட்டுனு நிறுத்தினா ஒண்ணும் ஆகாதா ? “
” சட்டுனு ஆரம்பிக்கும்போது எதுவும் ஆச்சா ? “
அனைவரும் சிரித்தோம்.
” நல்லது சார். சந்திச்சதுல மகிழ்ச்சி. நான் Blood Report எடுத்திட்டு Start செய்றேன் “
”
வாழ்த்துக்கள்
“
Car ல் ஏறும்போது அந்த பெண்மணி சொன்னார்
” காலையில் இருந்து Check செய்றோம். இவ்ளோ புத்தகங்கள் இருப்பது உங்களின் Car ல் தான் “
” நன்றி ” சொல்லிட்டு மீண்டும் கீழே இறங்கி ஒரு புத்தகம் எடுத்தேன். கொடுத்தேன்.
” Sign பண்ணி கொடுங்க சார் “
கொடுத்தேன்.
சிரிப்பு அங்கே நிலைக்க car மீண்டும் நகர ஆடம்பித்தது.
ஏனோ … ” அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் ” பாடலை பாட தோன்றியது !
பயணிப்போம்.





