நான் எனப்படும் நான் : 132
” Its the toughest time that requires our Calmness with Smile. Not at the Easiest time ! “
ஊர் முழுக்க பயம். மருத்துவமனைகள் தவிர எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. பயம் விரட்டுகிறது. தொலைதூர பிணங்களும், அருகாமை இறப்புக்களும் என்னவோ செய்கின்றன. அரசியல்வாதிகள் வழக்கம் போல எதிர்ப்பக்கத்தை குறை சொல்வது நமக்கு வெறுப்பை வரவழைக்கிறது. செய்திருக்க வேண்டியவை ரௌத்ரத்தையும், செய்யப்படுபவை ஏமாற்றத்தையும் தருகிறது. இவ்வளவிற்கும் இடையில் … அந்த ” அமைதியும் சிரிப்பும் ” மட்டுமே நம்பிக்கை தரும் ஆயுதங்கள்.
” Have Calmness and Have Smile. If so, The Problems of the Rest of World will be so unknown to you. “
அதெப்படி அமைதியாக இருக்க முடியும் ? சிரிக்க முடியும் ? என்று கேட்பவர்களுக்கு … வேறு என்ன நீங்கள் செய்கிறீர்கள் என்பது தான் இங்கே பதில்.
கோபம் வருகிறது.
இவ்வளவும் செய்து பிரச்சினைக்கு முன்பே மடிந்து போவதை விட … ஒரு அமைதியும், அத்துடன் புன்னகையும் .. உங்களுக்கு என்ன கொடுக்கும் என்பதை யோசிக்கலாமா ?
அப்படி ஒரு புன்னகை நிறை selfi ஒன்றை .. இங்கே Comment ல் பதிவோமா ?
” One Smile is capable of recharging many mind instruments ! “
அட .. நிச்சயம் அற்ற வாழ்க்கை தான் எப்போதும். இப்போது கொஞ்சம் density அதிகம். அவ்வளவுதான் வித்தியாசம். அப்போதும் அமைதியாக சிரித்து கடந்தோம். இப்போதும் சிரித்து கடப்போம்.
அப்படி ஒன்றும் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடவில்லை. Just அது தன்னை தன் இருப்பை தன் நிலையாயமை தன்மையை நமக்கு நினைவுபடுத்துகிறது. அவ்வளவுதான்.
” Uncertainty is the Best Medicine to Delete Ego. So in a way … Ego Cleansing happens in a Mass Movement “
உங்களின் அந்த அமைதியான சிரிக்கும் படத்திற்கு காத்திருக்கிறேன். நான் மட்டும் அல்ல. உங்களை சார்ந்த உலகமும் அதற்காகவே காத்திருக்கிறது.
” A Pic of Peace and Smile Brings Another Possibility of Life .. For someone somewhere ! “





