Covid 19 – 001



வெளித் தகவல்கள் காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. கண்களில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. உணர்வில் ஊறிக்கொண்டே இருக்கின்றன. எப்பேர்ப்பட்ட நேர்மறை சிந்தனையும் இப்போது கொஞ்சம் திகைத்து அமரக்கூடும். அப்படித்தான் இருக்கிறது வெளி உலகம். இறப்பு என்பது எல்லாம் இப்போது number என்றாகிவிட்டது. மிக சாதாரணமாக இலட்சங்களில் இறப்பு என்று பேசுகிறார்கள். ( உண்மையான இறப்பு 4 மடங்கு இருக்கும் என்கிறார்கள் ! ).
கங்கையில் பிணங்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் பயணிக்கின்றன. Remdisweer மருந்து வேண்டாம் என்கிறது WHO. ஆனால் இங்கே black ல் விற்கிறது. ( இப்போது நெறிமுறைப்படுத்தப்பட்டது நிறைவு ! ). Oxygen இல்லை, bed இல்லை, மருத்துவ உபகரணம் இல்லை, செவிலியர் தட்டுப்பாடு … என்று இல்லாதவைகள் நீள்கின்றன. பிரதமர் வேறு எந்த நாட்டுக்கோ பிரதமர் போல பேசிக்கொண்டே இருக்கிறார். குஜராத் துக்கு போகத்தெரிந்த அவருக்கு அவரின் சொந்த தொகுதியான வாரணாசி கண்ணுக்கு தெரியவில்லை. பிரதமரை காணவில்லை என்று பத்திரிகை செய்தி வருகிறது. உள்துறை அமைச்சர் எங்கே என்று கேட்டால் .. இப்போது என்ன தேர்தலா நடக்கிறது என்று யாரோ ஒருவர் சிரித்து கொண்டே பதில் சொல்கிறார்.
Governance தான் நம்பிக்கை கொடுப்பதில் முதல் இடத்தில் இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது image make over ல் சுற்றிக்கொண்டு இருக்கிறது. நேரு காலத்தில் … என்று ஆரம்பித்து என்னென்னவோ பேசுகிறார்கள். ஆனால் கண்ணெதிரே பிணங்கள் விழுந்து கொண்டே இருக்கின்றன. Facebook ல் யாருடைய முகமாவது பார்த்தால் பக் கென்று இருக்கிறது.



இவ்வளவும் நம்மை நம் நேர்மறை சிந்தனைகளை பின்னோக்கி இழுப்பவை. இப்போது தேவை இவை அல்ல. இப்போதைய தேவை உள் நோக்கிய பயணமும் தெளிவும்.
நமக்குள் சில கேள்விகளும் அவற்றிற்கான பதில்களும்.
1. நாம் உயிரோடு இருக்கிறோமா ?
இருக்கிறோம். அதற்கு கடவுளுக்கு / இயற்கைக்கு நன்றி சொல்வோம்.
2. நாம் அரசாங்கம் / மருத்துவர் சொன்ன Covid19 விதிமுறைகளை பின்பற்றுகிறோமா ?
ஆம். பின்பற்றுகிறோம்.
3. நம் குடும்ப /உறவு / நட்பு / தொழில்/ சமூக … உறவுகளுக்கு நம்மால் இயன்ற அளவு உதவுகிறோமா ?
ஆம். உதவுகிறோம். அதில் நிறைவு கொள்வோம்.
4. அளவான உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், புத்தகம் வாசித்தல், நீண்ட நாட்களாக வீட்டிற்குள் இருந்து செய்ய நினைத்தவற்றை செய்தல் … என்று வாழ்கிறோமா ?
ஆம். அப்படித்தான் வாழ்கிறோம்.
5. மனைவிக்கு, கணவனுக்கு, குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு .. முடிந்த உதவிகளை செய்கிறோமா ?
ஆம். செய்கிறோம்.
6. சேமிப்பு / பொருளாதார / நிர்வாகம் சம்பந்தமான முக்கிய தகவல்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லியாயிற்றா ?
ஆம். சொல்லியாற்று.
7. Insurance விடயங்கள் சரியான நாட்களில் renewal செய்யப்பட்டு இருக்கிறதா ?
ஆம்.செய்யப்பட்டாயிற்று.
8. தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் நம் மனநிலை சமநிலையை மீண்டும் மீண்டும் அடைகிறோமா ?
ஆம். அடைகிறோம்.
9. விளிம்பு நிலை மனிதர்களுக்கு நம்மால் ஆன பண உதவிகளை செய்கிறோமா ?
ஆம். செய்கிறோம்.
10. நல்ல இசை நம்மை மகிழ்விக்க எப்போதும் காத்திருக்கிறது. சில நொடிகளில் மனம் இலேசாகும் அந்த இசை கேட்டலை .. செய்கிறோமா ?
ஆம். செய்கிறோம்.



இவை எல்லாம் நமக்குள் கவனிக்கப்பட வேண்டியவை. எனவே இங்கே கவனம் வைப்போம். அரசாங்கம் அவர்களுக்குரிய பணிகளை செய்தால் வாழ்த்தும், செய்யவில்லை எனில் தண்டனையும் பெறட்டும்.
நாம் நமக்குள் முழுவதுமாக விழுவோம். அங்கே எத்தனை முறை விழுந்தாலும் மனமும் உடலும் மீண்டும் மீண்டும் புத்துணர்வே பெறும்.


