Covid 19 – 002



” எனக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா ? “
” பிறகு என் குழந்தைகளை யார் பார்த்துக்குவா ? “
” மனைவி எப்படி உலகத்தை face பண்ணுவா ? “
” இந்த சொத்து எல்லாம் அவ்வளவு தானா ? இதற்கு தான் இவ்வளவுமா ? “
” என் தொழில் என்ன ஆகும் ? கடன் எல்லாம் என் மனைவி குழந்தைகள் தலையில் விழுமா ? “
” நான் வாங்கிய இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேனா ? “
இது அனைத்தும் ஒரே மனிதனின் ( ஆணின் / பெண்ணின் ) மனக்குரல் தான் ! விட்டு விட்டு … ஆனால் தொடர்ச்சியாக வரும் இந்த சிந்தனைகள் தான் இந்த Covid சூழலில் நமக்கு முதல் எதிரி ! இங்கே தான் Over Thinking ன் ஆணி வேர்.



” எனக்கு Bed கிடைக்குமா ? “
” Local ல் இல்லாமல் என் இறப்பு வேறு ஊரில், யாருமே இல்லாத சூழலில் நடந்து விடுமோ ? “
” இவ்வளவு பணம் இருந்தும் என்னை என் குடும்பத்தை காப்பாற்றாமல் போய்விட கூடுமோ ? “
ஹலோ ஹலோ .. மீண்டும் சிந்தனைகள் வேறு பக்கம் பயணிக்க ஆரம்பிப்பதை உணர்கிறோமா ? ஆம்.
இப்போது நான் எங்கே இருக்கிறேன் ?
வீட்டில்.
என் குடும்பம் ?
வீட்டில்
வீட்டில் இருக்கும் அனைவரும் நலமா ?
நலம்.
பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கிறோமா ?
ஆம். கடைபிடிக்கிறோம்.
வீட்டில் யாருக்காவது ஏதாவது ஒன்று எனில்… அதை சந்திக்கும் பக்குவம் மற்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள் சொல்லியாயிற்றா ?
சொல்லியாயிற்று.
வீட்டிற்குள் இருக்கிறோமா ?
ஆம். இருக்கிறோம்.
சரி .. அப்படி எனில் … அமைதியாக தூங்க செல்வோம். அவ்வளவு தான் Thinking தேவை. இதற்கு மேல் அனைத்தும் Over Thinking தான் !



இந்த Over Thinking ஒரு உலகளாவிய பிரச்சினை. அடுத்த வருடம் மழை வருமா ? என்பதில் இருந்து, மகன் நான் சொன்ன பேச்சை கேட்பானா என்பது வரை .. இந்த Over Thinking ஒரு மன வியாதி ! நடக்காத ஒன்றை … மனதிற்குள் நடத்திக்கொண்டே இருப்பது தான் … இந்த Over Thinking ன் எரிபொருள்.
இதில் மட்டும் அல்ல. வராத இலாபத்தை இப்போதே கணக்கிட்டு அதை பற்றிய கனவில் வாழ்வதும் இதில் அடக்கம். கெட்டதை பற்றிய Over Thinking போல நல்லதை பற்றிய Over Thinking ம் வியாதி தான் !



Monk ஒருவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.
” மனம் இங்கே இக்கணத்தில் வாழ என்ன செய்ய வேண்டும் ? “
சிரித்துக்கொண்டே அந்த Monk சொன்னார்.
” பசிக்கும்போது சாப்பிடு. தூக்கம் வரும்போது தூங்கிவிடு. “



( Twitter ல் கிடைத்த picture ஐ இங்கே Poster ல் இணைத்திருக்கிறேன். அந்த சிற்பத்தை செய்தவருக்கு எம் வாழ்த்துக்கள் ! )


