Covid 19 – 003



” பாட்டி இறந்துட்டாங்க …என்ன செய்வதுன்னு தெரியலை ! “
” நினைச்சே பார்க்கல …அம்மா இப்போ இல்ல “
” சின்ன வயசு. சாகற வயசா எம் பையனுக்கு ! ? “
” கணவர் இல்லை. எனக்கு எதுவும் தெரியாது. என்ன செய்யறது ன்னு தெரியலை “
” மனைவி போயிட்டா வாழ்க்கையே போச்சே…இனி நான் என்ன செய்வேன் ? “
இவை எல்லாம் இப்போது உள்ள சூழலில் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. யாரோ யாருக்கோ என்று அல்ல. நம் அலுவலகத்தில். நம் நட்பில். நம் வட்டத்தில். நம் உறவினர்களில். நம் குடும்பத்தில்.
நாமும் கொஞ்சம் திக்கித்தே போகிறோம். ஏன் இப்படி ? என்கிற கேள்வி தான் இன்றைய உலகின் most asked question within. இதை யாரிடம் கேட்பது, யார் இதன் காரணம் ? யார் இதற்கு பதில் சொல்வார் ? அரசாங்கம் என்ன செய்கிறது ? ஏன் மருத்துவமனைகள் இப்படி நடந்துகொள்கின்றன ? …. கேள்விகள் கேள்விகள் மேலும் கேள்விகள். ஒரே ஒரு இறப்பு எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது. தொடர் இறப்புகள் ? நம்மை நம்பிக்கையில் இருந்து பிரிக்க முயற்சிக்கிறது.



ஏன் இறப்பு நம்மை பின்னோக்கி நகர்த்துகிறது ? அல்லது இருக்கும் இடத்திலேயே உட்கார வைத்து விடுகிறது ? ஏன் இறப்பு நம்மை சட்டென அனைத்திலும் இருந்து ” விலக்குகிறது ? ” காரணம் மிக எளிது. நமக்கு இறப்பு வராது என்கிற அசட்டு நம்பிக்கை. ( Insurance போட்டுக்குங்க என்று சொன்னால் … ” எனக்கு Accident நடக்காது சார் ” போன்ற கதை தான் ! ). அல்லது இறப்பை நாம் தவிர்த்திட முடியும் என்கிற வறட்டு புத்திசாலித்தனம். இரண்டும் தவறு.
இறப்பு / இழப்பு தவிர்க்க முடியாதது. உயிரோடு இருக்க எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம். தவறே இல்லை. ஆனால் இறப்பே வரக்கூடாது என்று போராடுவது முட்டாள்தனம். ( இரண்டும் வேறு வேறு. உயிரோடு இருக்க முயற்சிப்பது நம் control ல் இருப்பவற்றை சரியாக செய்ய முயற்சிப்பது. இறப்பு வரக்கூடாது என்பது இயற்கையை கட்டுக்குள் கொண்டு வர முனைவது ! ) யாராக இருந்தாலும், நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைசி குடிமகன் வரை .. இறப்பில் இருந்து தப்பிக்க முடியாது. தப்பிக்கவே முடியாது. யதார்த்தம் பழகுதல் நல்லது. மிக மிக நல்லது !



சரி. இறப்பு வந்துவிட்டது. இப்போது என்ன செய்வது ?








என்ன ? ஏதோ ஒரு உணர்வு உள்ளே இருந்து உருண்டையாய் எழுந்து வர முயற்சிக்கிறதா ? அதை தீர்க்கமாக கவனித்துவிட்டு .. ஒரே ஒரு வரியை உள்ளே சொல்லிக்கொள்ளலாம்.
” இதையும் கடப்பேன். இங்கிருந்தும் வாழ்க்கை முன்னேறிக்கொண்டே தான் இருக்கும். ஆம். அது நான் என் குடும்பத்திற்காக வடிவமைக்கும் வாழ்க்கை. அது எனக்கானது. என் குடும்பத்திற்கானது.
ஆம். அது உங்களுக்குமானது.


