படமும் கற்றலும் : 004
” வாழ்தல் தான் அனைத்தையும் விட முக்கியமான ஒன்று. “



இந்த இரு புகைப்படங்கள் பல செய்திகளை மௌனமாக சொல்கின்றன. புகைப்படங்களின் சிறப்பே அப்படி மௌனமாக சொல்வது தானே !
Vogue என்று ஒரு மாதாந்திர பத்திரிகை. 1892 ல் இருந்து வெளிவருகிறது. அதன் அட்டைப்படம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. Vogue அட்டைப்படத்தில் தன் முகம் வருகிறது எனில் அந்த முகம் உலகம் முழுக்க சட்டென தெரிந்து விடும். அதாவது Vogue ஒரு Instant Worldwide Visiting Card. Fashion / Models / சார்ந்த ஆளுமைகள், குறிப்பாக பெண் ஆளுமைகளை அது தன் cover பக்கத்தில் கொண்டு வரும். Lauren Hutton என்கிற Fashion சார்ந்த ஆளுமை 40 முறை Vogue cover ல் வந்திருக்கிறார். ( comment ல் அவரின் cover இணைத்திருக்கிறேன் ! ). சரி … இதற்கும் இங்கே இருக்கும் புகைப்படத்திற்கும் என்ன சம்பந்தம் ?
Fashion உலகில் அல்லது Models உலகில் ஆளுமைகளை cover படமாக வைக்கும் Vogue வரும் July 2021 cover படமாக மலாலா வை வைக்கவிருக்கிறது. சரி. அதில் என்ன special !?



மலாலா வின் புத்தகம் நீங்கள் படித்திருக்கிறீர்களா ? என்று தெரியவில்லை. அது சொல்லும் செய்திகள் பலப்பல. ஆனால் அதில் மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. ” எதையும் எதிர்கொண்டு வாழ்வது ! “. பள்ளிக்கு போகக்கூடாது என்று சொல்லியதை கேட்காததால் துப்பாக்கியால் Taliban களால் சுடப்பட்ட ஒரு ஆளுமை, இன்று Vogue ன் Cover ல் வருகிறது. இதில் இருக்கும் இரு நேர்மறை முரண்கள் தான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று.



நேர்மறை முரண் 01 ;
வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொல்லப்பட்ட உலகில் இருந்து ஒரு ஆளுமை Vogue ல் Cover பக்கத்தில் சிரித்த முகமாய் நிற்கிறது. இது வாழ்வின் மிகப்பெரும் நிகழ்கால பாடம். ” எதையும் எதிர்கொண்டு வாழ்வது ” என்பது ஒரு பள்ளி வகுப்பு பாடமாக மாறும் பட்சத்தில் மலாலா மட்டுமே அதற்கு உலக அளவில் ஆசிரியராக இருப்பார். ” நான் படிக்க ஏன் பள்ளிக்கு போகக்கூடாது ” என்று கேட்ட ஒரு பெண் ஆளுமை தனக்கு எதிரே இருக்கும் அத்தனை தடைகளையும் உடைத்து இன்று Oxford வரை தன் கல்விக் கனவை ( Bachelor of Arts in Philosophy, Politics and Economy ) கொண்டு சென்று இருக்கிறது. Nobel பரிசு தன்னை அடைந்த போது .. இந்தியாவும் பாகிஸ்தானும் பகைமையை மறக்க வேண்டும் என்று சொன்ன அந்த சிறுமியை உலகமே அதிசயமாக பார்த்தது ! ( காலையில் எழுந்து பள்ளிக்கு போகலாமா வேண்டாமா என்று யோசிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் ஒரு முறை படிக்க வேண்டிய புத்தகம் ” I am Malala “. ) மலாலா பேசிய வரிகளில் பலவை மிக முக்கியமானவை. அதில் என்னை மிக ஈர்ப்பது …
” We Realise the Value of our Voices only when we are Silenced ! “
நேர்மறை முரண் 02 ;
Vogue பத்திரிகை மலாலாவை cover பக்கத்தில் வைப்பதன் மூலம் முக்கிய செய்தி ஒன்றை சொல்கிறது. Fashion மட்டுமே பெண்களின் அடையாளம் அல்ல ! வாழ்க்கையை கடின தருணங்களில் வாழ்ந்து, எதிர்கொண்டு, பெரும் உயரங்களை அடைவதும் பெண்களின் அடையாளமே ! பெண்களை Just ஒப்பனை அழகாக Cover பக்கத்தில் இவ்வளவு வருடங்கள் கொண்டு வந்ததை அனைத்தையும் இந்த ஒரு படம் .. சுக்குநூறாக மாற்றுகிறது. இனி ” அழகு மற்றும் போகப் பொருளாக ” பார்க்கப்படுவது மட்டுமே பெண் வாழ்க்கை அல்ல என்பது Vogue சொல்லாது சொல்லும் செய்தியாக இருக்கக்கூடும்.
இந்த Cover பக்கத்தில் வரும் மலாலாவின் உடை பற்றி அவரிடம் கேட்டபோது … ” அது எங்களின் மரபு. அதுவே எங்களின் அடையாளம் ” என்று அவர் சொல்வது அடுத்த Fashion Statement ஆக மாறக்கூடும். Fashion என்றால் நிறைய உடலும் கொஞ்ச உடையும் என்ற எந்த உபயோகமும் அற்ற பார்வை இங்கே உடைத்து எறியப்படுகிறது. ஆம். எந்த மரபும் தன் மரபை மாற்றிக்கொள்ளாமல் அடையாளத்தை இழக்காமல் limelight க்கு வரமுடியும் என்பது யோசிக்க வேண்டிய கரு !



இரு கேள்விகள் இங்கே என்னுள் எழுகிறது. இதை பார்க்கும் இருக்கும் Taliban களுக்கு இப்போது என்ன தோன்றும் ? அங்கே அடுத்த குழந்தை பள்ளிக்கூடம் நோக்கி எந்த பிரச்சினையும் இல்லாது போக ஆரம்பிக்குமா ?
உங்களுக்குள் .. இப்போது என்ன கேள்வி எழுகிறது ?


